ஜப்பான்: வர்த்தக நிர்வாகி விசாக்களில் நாட்டுக்குள் நுழையும் வெளிநாட்டினருக்கான நிபந்தனைகளை ஜப்பான் மேலும் கடுமையாக்கத் திட்டமிடுகிறது.
பலர் அந்தக் கட்டமைப்பைத் தவறாகப் பயன்படுத்துவதாக எழும் கவலைகளுக்கு இடையே ஜப்பான் அந்த முடிவை எடுத்துள்ளது.
வர்த்தக நிர்வாகி விசாக்களுக்கான குறைந்தபட்ச மூலதன முதலீட்டை 5 மில்லியன் யென்னிலிருந்து 30 மில்லியனுக்கு உயர்த்துவது ஜப்பானின் குடிநுழைவுச் சேவைகள் அமைப்பு முன்மொழிந்த மாற்றங்களில் ஒன்று.
விசாக்களுக்கு விண்ணப்பம் செய்வோர் குறைந்தது ஒரு முழுநேர ஊழியரையாவது தமது நிர்வாகத்தில் பணியமர்த்தவேண்டும்.
விசாக்களைப் பெறும் நோக்கில் செயல்படாத நிறுவனங்களைச் சிலர் அமைப்பதாக அண்மையில் சில சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்தன.
ஜப்பானில் வர்த்தகத்தைத் தொடங்கி, அதை நிர்வகிக்க வெளிநாட்டினருக்கு வழிவகுக்கும் வர்த்தக நிர்வாகி விசாக்களுக்கான புதிய நிபந்தனைகள் அக்டோபர் மாதம் நடப்புக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பர் 24ஆம் தேதி வரை நிபந்தனைகள் பற்றிய பொதுமக்கள் கருத்துகளை அமைப்பு திரட்டவிருக்கிறது.
புதிய கட்டமைப்பின் கீழ் விசாக்களுக்கு விண்ணப்பம் செய்வோர் தங்கள் நிறுவனம் தொடர்பில் குறைந்தது மூவாண்டு வேலை அனுபவத்தைக் கொண்டிருக்கவேண்டும் அல்லது தகுந்த கல்வித் தகுதியைக் கொண்டிருக்கவேண்டும்.
சிறிய, நடுத்தர நிர்வாக ஆலோசனை சான்றிதழ்கள் வைத்திருக்கும் நிபுணர்களால் விண்ணப்பதாரரின் புதிய வர்த்தகத் திட்டங்கள் சரிபார்க்கப்படுவதும் கட்டாயமாக்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
தற்போதைய நடைமுறையின்படி ஜப்பானில் தங்கள் வர்த்தகத்தின் அலுவலகத்தை வைத்திருக்கும் தனிநபர்கள் விசாக்களுக்குத் தகுதிபெறுகின்றனர். அத்தகையோரின் வர்த்தகம் ஜப்பானில் தொடங்கியிருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை.
அவர்கள் குறைந்தது 5 மில்லியன் யென் மூலத்தனத்தைக் கொண்டிருக்கவோ இரண்டுக்கும் மேற்பட்ட முழுநேர ஊழியர்களைப் பணியமர்த்தியிருக்கவோ அவசியமில்லை.
கடந்த ஆண்டு இறுதி நிலவரப்படி, ஜப்பானில் விசாக்களில் வாழும் வெளிநாட்டினர் எண்ணிக்கை சாதனை அளவாக 41,615ஆக பதிவானது.