‘பேட்ரியட்’ ஏவுகணைகளை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்த ஜப்பான்

1 mins read
f9ea4dcf-cdd5-4cb3-9c66-9e4da8f782cd
ஏவுகணைத் தாக்குதல்களிலிருந்து தற்காத்துக்கொள்ளும் திட்டத்தின்கீழ் ‘பேட்ரியட்’ ஏவுகணைகளைத் தயாரிப்பதாக ஜப்பான் கூறியது. அவற்றை அமெரிக்கா மட்டுமே பயன்படுத்தலாம். வேறு நாடுகளிடம் அவற்றை ஜப்பான் விற்க முடியாது. - படம்: ஏஎஃப்பி

தோக்கியோ: கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில், பேட்ரியட் ஏவுகணைகளை அமெரிக்காவுக்கு முதல்முறையாக ஜப்பான் ஏற்றுமதி செய்துள்ளது.

இந்த ஏவுகணைகள் ஜப்பானில் தயாரிக்கபட்டவை.

நிலத்திலிருந்து பாய்ச்சப்படும் அவ்வகை ஏவுகணைகள் வானில் உள்ள ஏவுகணைகளைத் தகர்க்கக்கூடியவை.

அமெரிக்கா கேட்டுக்கொண்டதற்கு இணங்க அந்த ஏவுகணைகளை ஜப்பான் ஏற்றுமதி செய்தது.

ரஷ்யாவுக்கு எதிராகப் போரிட்டு வரும் உக்ரேனுக்கு அமெரிக்கா ராணுவ ஆதரவு வழங்கி வரும் நிலையில், தனது ஏவுகணை ஆற்றலை மேம்படுத்த ஜப்பானிடமிருந்து ‘பேட்ரியட்’ ஏவுகணைகளை அமெரிக்கா பெற்றுக்கொண்டது.

அமெரிக்க உரிமத்தின்கீழ் ஜப்பான் பேட்ரியட் ஏவுகணைகளைத் தயாரிக்கிறது.

ஏவுகணைத் தாக்குதல்களிலிருந்து தற்காத்துக்கொள்ளும் திட்டத்தின்கீழ் ‘பேட்ரியட்’ ஏவுகணைகளைத் தயாரிப்பதாக ஜப்பான் கூறியது.

அவற்றை அமெரிக்கா மட்டுமே பயன்படுத்தலாம். வேறு நாடுகளிடம் அவற்றை ஜப்பான் விற்க முடியாது.

அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பேட்ரியட் ஏவுகணைகளின் எண்ணிக்கை குறித்த தகவல் வெளியிடப்படவில்லை.

குறிப்புச் சொற்கள்