டெஹ்ரான்: இஸ்ரேலுக்காக வேவு பார்த்த மூவரை ஈரான் தூக்கிலிட்டுள்ளதாக ஈரானிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த மூவரும் இஸ்ரேலிய உளவுத்துறையான ‘மொசாட்’டுடன் இணைந்து செயல்பட்டதாகவும் ஈரானில் நடத்தப்பட்ட படுகொலை ஒன்றில் பயன்படுத்தப்பட்ட கருவிகளை ஈரானுக்குள் கடத்திக்கொண்டு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் படுகொலை குறித்து கூடுதல் விவரங்களை ஈரான் வெளியிடவில்லை.