காட்மாண்டு: எவரெஸ்ட் மலையில் காணப்படும் மனிதக் கழிவு, காலியான ஆக்சிஜன் கலன்கள், மிச்சமுள்ள சமையலறைப் பண்டங்கள், எறியப்பட்ட ஏணிகள் உள்ளிட்ட 10 கிலோகிராமுக்கும் அதிக எடைகொண்ட குப்பையை ஷெர்ப்பாஸ் எனப்படும் மலையேறிகள் அகற்றுவதுண்டு.
இந்தக் கடும் சவாலை எதிர்நோக்கும் அவர்களுக்கு உதவுகின்றன வானூர்திகள். பல மணிநேரம் நீடிக்கும் ஷெர்ப்பா மலையேறிகளின் அப்பயணத்தை வானூர்திகள் ஆறே நிமிடங்களில் செய்து முடிக்கின்றன.
எஸ்ஸி டிஜேஐ டெக்னாலஜி கோ (SZ DJI Technology Co) ராட்சத வானூர்திகள் ஷெர்ப்பாக்களுக்கு உதவியாக இருந்தன.
கடலுக்கு 6,065 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும், எவரெஸ்ட் மலையின் முகாம் 1ல் குப்பையை அகற்ற வானூர்திகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
கடந்த ஏப்ரல் மாத நடுப்பகுதி, மே நடுப்பகுதிக்கு இடைப்பட்ட காலத்தில் நேப்பாளத்தின் ஏர்லிஃப்ட் டெக்னாலஜி நிறுவனம் இயக்கும் வானூர்திகள் 280 கிலோகிராமுக்கும் அதிக எடைகொண்ட குப்பையை அகற்றியதாக சகர்மாதா காற்று தூய்மைக்கேட்டுக் கட்டுப்பாட்டு குழு (எஸ்பிசிசி) தெரிவித்தது. அந்த அமைப்பு, எவரெஸ்ட்டில் குப்பை அகற்றும் பணிகளைக் கவனித்துக்கொள்ளும் உள்ளூர் லாப நோக்கில்லா அமைப்பாகும்.