அன்காரா: துருக்கியின் மேற்குப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவில் அது 6.1ஆகப் பதிவானது.
துருக்கியில் கிட்டத்தட்ட மூன்று மாதங்களில் இரண்டாவது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாகத் துருக்கியின் பொருளியல் தலைநகரான இஸ்தான்புல்லிலும் சுற்றுலாத் தளமான இஸ்மிரிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டதாக அந்நாட்டின் அவசரநிலைப் பிரிவு கூறியது.
காயமடைந்தோர் தொடர்பான தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நிலநடுக்கம் ஏற்பட்டபோது மூன்று கட்டடங்கள், ஒரு கடை ஆகியவற்றில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
இம்முறை நிலநடுக்கம் ஏற்பட்டதில் அந்தக் கட்டடங்கள் அனைத்தும் இடிந்து விழுந்ததாகத் துருக்கியின் உள்துறை அமைச்சர் அலி யெர்லிகாயா தெரிவித்தார்.
2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், துருக்கியின் தென்மேற்குப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குறைந்தது 53,000 பேர் மாண்டனர்.

