புத்ராஜெயா: மலேசிய சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் சுதந்திரமாகச் செயல்படும் அமைப்பாக மாற்றப்படும் என்று மலேசியப் போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்துறையிலிருந்து அது பிரிக்கப்பட்டு நிதி, நிர்வாகம் ஆகியவற்றில் சுதந்திரமாகச் செயல்படும்.
இதைத் தொடர்ந்து, மலேசிய சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்துக்கு மலேசிய அரசாங்கம் ஆண்டுதோறும் நிதி ஒதுக்கத் தேவையில்லை.
இதன்மூலம் மலேசிய அரசாங்கத்துக்கு அடுத்த பத்தாண்டுகளில் 1.5 பில்லியன் ரிங்கிட் முதல் 2 பில்லியன் ரிங்கிட் வரை மிச்சமாகும் என்றார் அமைச்சர் லோக்.
இந்த மாற்றத்தை நடைமுறைப்படுத்த ஜூன் 11ல் மலேசிய அரசாங்கம் ஒப்புதல் வழங்கியதாக அவர் கூறினார்.
மலேசியப் போக்குவரத்து அமைச்சின் தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் லோக் இந்தத் தகவல்களை வெளியிட்டார்.
மேலும், ஆகஸ்ட் 1லிருந்து மலேசிய விமானப் போக்குவரத்து ஆணையத்துடன் மலேசிய சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் இணைக்கப்படும் என்று அவர் கூறினார்.
இவ்வாண்டின் முதல் ஐந்து மாதங்களில் மலேசிய சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் ஏறத்தாழ 150 மில்லியன் ரிங்கிட் வருமானம் ஈட்டியதாக திரு லோக் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது ஆணையத்தின் வருமானம் இவ்வாண்டு அதிகம் என்றார் அவர்.