பெய்ஜிங்: சீனாவின் தென் மேற்கில் உள்ள குய்சாவ் மாநிலத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் 80,000க்கும் அதிகமானோர் வீடுகளிலிருந்து தப்பியோடினர்.
கடுமையானக் கோடைக் காலத்தை எதிர்கொள்ளும் சீனாவின் பல்வேறு வட்டாரங்களில் மழை கொட்டித் தீர்க்கிறது.
குய்சாவ்வில் அவசரநிலை இரண்டாம் உச்சத்துக்கு உயர்த்தப்பட்டதை அடுத்து மீட்புக் குழுக்கள் இரண்டு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டன.
ரொங்ஜியாங்கில் உள்ள ஒரு காற்பந்தாட்டத் திடல் 3 மீட்டர் வெள்ள நீரில் அமிழ்ந்ததாகச் செய்தி நிறுவனங்கள் கூறின.
நீர் மட்டம் மிக துரிதமாக உயர்ந்ததாகக் குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர்.
ஜூன் 24 பிற்பகல் வாக்கில் ஏறக்குறைய 80, 900 பேர் வீடுகளிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
கைலி நகரில் பாலம் இடிந்துவிழுந்ததைக் காணொளிகள் காட்டின.
கடும் மழை காரணமாக மத்திய சீனாவின் ஹூனான் பகுதியில் கடந்த வாரம் பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
வுதிப் புயலால் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தை அடுத்து தென் சீனாவில் 70,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
ஆறு வட்டாரங்களில் கனத்த மழை பெய்ததால் சீன அதிகாரிகள் இவ்வாண்டில் முதன்முறையாக சிவப்பு எச்சரிக்கையைக் கடந்த வாரம் அறிவித்தனர்.