பெய்ஜிங்: சீனாவில் இலையுதிர் கால விழாவை ஒட்டி அக்டோபர் 1 முதல் அக்டோபர் 8ஆம் தேதி வரை எட்டு நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டது.
நீண்ட நாள் விடுமுறை என்பதால் பெய்ஜிங் உள்ளிட்ட பெரும் நகரங்களில் வாழும் மில்லியன் கணக்கான சீன மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குப் பயணங்கள் மேற்கொள்வது வழக்கம்.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான இலையுதிர் கால விழா விடுமுறையில் மட்டும் 2.43 பயணங்கள் பதிவாகியுள்ளன. அதாவது சராசரியாக ஒரு நாளுக்கு 304 மில்லியன் பயணங்கள் பதிவாகியுள்ளன. இதுமுன்னெப்போதும் இல்லாத அளவில் அதிகம்.
ரயில்மூலம் மட்டும் 153 மில்லியன் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாள் ஒன்றுக்குச் சராசரியாக 19.24 மில்லியன் ரயில் பயணங்கள் பதிவாகின. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் அது 2.6 விழுக்காடு அதிகம்.
படகுகள்மூலம் 11.67 மில்லியன் பயணங்கள் பதிவாகியுள்ளன. அதாவது நாள் ஒன்றுக்குச் சராசரியாக 1.46 மில்லியன் படகுப் பயணங்கள் ஆகும்.
அதேபோல் விமானங்கள் மூலம் 19.17 மில்லியன் பயணங்கள் பதிவாகியுள்ளன. அதாவது நாள் ஒன்றுக்குச் சராசரியாக 2.4 மில்லியன் படகுப் பயணங்கள் ஆகும்.
சாலை வழியாக மட்டும் 2.25 பில்லியன் பயணங்களை மக்கள் மேற்கொண்டுள்ளனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் அது 6.5 விழுக்காடு அதிகம்.
அக்டோபர் 1ஆம் தேதி மட்டும் ஆக அதிகமாக 336 மில்லியன் பயணங்கள் பதிவாகின.