ஆஸ்திரேலிய விமானங்களில் கையடக்க மின்னூட்டி பயன்படுத்தத் தடை

1 mins read
cbc6da63-f522-4987-bb31-7ec148819b7f
பெரும்பாலான விமானங்களில் 100 வாட்-அவர் வரை சக்திகொண்ட கையடக்க மின்னூட்டிகளைக் கொண்டுசெல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிட்னி: ஆஸ்திரேலிய விமானங்களில் பயணம் செய்யும்போது பயணிகள் கையடக்க மின்னூட்டிகளைக் (power bank) கொண்டு தனிப்பட்ட சாதனங்களுக்கு மின்னூட்டத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வெர்ஜின் ஆஸ்திரேலிய விமானங்களில் டிசம்பர் 1ஆம் தேதி முதல் அது நடப்புக்கு வருகிறது. அதேபோல் குவான்டஸ், குவான்டஸ்லிங்க், ஜெட்ஸ்டார் விமானங்களில் டிசம்பர் 15ஆம் தேதி முதல் தடை அமலுக்கு வருகிறது.

தடை அனைத்துலக மற்றும் உள்நாட்டு விமானங்கள் அனைத்திலும் பின்பற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் யாருக்கும் விலக்கு அளிக்கப்படாது என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம் வெர்ஜின் ஆஸ்திரேலிய விமானம் ஒன்றில் கையடக்க மின்னூட்டியால் தீச்சம்பவம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து விமான நிறுவனங்கள் பாதுகாப்பு தொடர்பான விதிமுறைகளை மாற்றியுள்ளன.

கையடக்க மின்னூட்டிகளைப் பயணிகள் எடுத்து வரலாம். ஆனால் அதை எளிதாக எடுக்கும் வகையில் பயணிகள் வைக்க வேண்டும் என்று விமான நிறுவனங்கள் தெரிவித்தன.

பெரும்பாலான விமானங்களில் 100 வாட்-அவர் வரை சக்திகொண்ட கையடக்க மின்னூட்டிகளைக் கொண்டுசெல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்