தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஐரோப்பாவில் படிப்படியாக அறிமுகம் காணும் தானியக்கக் குடிநுழைவு முறை

1 mins read
da33804b-1039-4fd7-94b4-001bab725221
ஆறு மாதங்களுக்குள் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளில் பல கட்டங்களாக இம்முறை அறிமுகப்படுத்தப்படும்.   - படம்: ராய்ட்டர்ஸ்

பிரசல்ஸ்: ஐரோப்பிய ஒன்றிய வட்டார நாடுகளைச் சேராதோருக்கான தானியக்கக் குடிநுழைவு முறை ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 12) முதல் நடப்புக்கு வந்தது.

ஈஈஎஸ் என அழைக்கப்படும் உள்நுழைவு-வெளியேறும் முறையில் பயணிகளின் தகவல்கள், அவர்களின் முக அடையாளங்கள், விரல் ரேகை ஆகியவையும் சேகரிக்கப்படும்.

பயணிகள் ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைந்து, வெளியேறும் தேதிகளும் பதிவு செய்யப்படும். இதன்மூலம், அனுமதிக்கப்பட்ட காலத்துக்கு மேல் அந்நாடுகளில் தங்குவோர், நுழைய அனுமதி மறுக்கப்பட்டோர், சட்டவிரோதமாகக் குடியேறுவோர் ஆகியோரின் தகவல்கள் சேகரிக்கப்படும்

ஆறு மாதங்களுக்குள் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளில் பல கட்டங்களாக இம்முறை அறிமுகப்படுத்தப்படும்.

இந்தப் புதிய தானியங்கி முறை எங்கள் புதிய பொதுவான ஐரோப்பிய குடிநுழைவு, தஞ்சம் புகுதல் கட்டமைப்பின்மின்னிலக்க முதுகெலும்பு என ஐரோப்பிய உள் விவகாரங்கள், குடியேறுதல் ஆணையர் மேக்னஸ் புரூனர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்