ஆஸ்டின் (டெக்சஸ்): அமெரிக்காவின் தூதரக ஊழியரணியை, பெருமளவில் நடத்தப்பட்ட ஆட்குறைப்பு ஆட்டம்காண வைத்துள்ளது.
அமெரிக்காவுக்கு ஆசியான் முக்கியம் என்ற நிலைப்பாட்டிற்கு முரணாக தற்போதைய செயல்பாடுகள் இருப்பதாகக் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
அமெரிக்கா, ஆசியான் இடையிலான ஈடுபாடு கொள்வதற்கு பொறுப்பு வகிக்கும் அலுவலகம், ஜூலை 11ஆம் தேதி மூடப்பட்டுள்ளது.
இதனைப் போல அண்மையில் எடுக்கப்பட்டு வரும் பல்வேறு நடவடிக்கைகள், வரலாற்றுச் சிறப்புமிக்க புனரமைப்பு என அமெரிக்க வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.
கிழக்காசிய, பசிஃபிக் விவகாரங்களுக்கான வெளியுறவு அமைச்சின் அலுவலகத்திலுள்ள பணியாளர்கள் 1,300க்கும் அதிகமானோர் தங்கள் வேலையை இழந்துள்ளனர்.
அடுத்த சில மாதங்களில் வேலையிழப்புகள், குறிப்பாக வெளிநாட்டு இடங்களில், தொடர்ந்து ஏற்படக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டது.
வெளியுறவு அமைச்சிலுள்ள தங்கள் அலுவலகங்களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பை நாடி மசோதா ஒன்றை முன்வைக்க அமெரிக்க ஜனநாயகக் கட்சியினர் யோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
ஆசியான்மீது ஈடுபாடு கொள்வது முக்கியம் என்பதைப் புரிந்துகொள்ள முன்னணி தென்கிழக்காசிய நிபுணர்கள், இத்தகைய திறனாளர்கள் விலகுவது பாதகமாக இருக்கும் என நன்கு அறிந்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
ஆனால், வெளியுறவு அமைச்சின் ஊழியரணி, அளவுக்கு அதிகமாக இருப்பதுடன் நிறைய சிக்கல்களைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
கூடுதல் செயல்திறன்மிக்க, வேகமாகச் செயல்படக்கூடிய வெளியுறவு அமைச்சு, அமெரிக்காவுக்குக் கூடுதல் உதவி அளித்து உலகெங்கும் எழும் மிரட்டல்களைக் கையாள வல்லது என்று அந்த அமைச்சைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்தார்.
ஆட்குறைப்பு செய்யப்படும் ஒரு நாள் முன்னதாக ஆசியான் உச்சநிலைக்கூட்டம் ஒன்றில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ரூபியோ, நீக்கப்படுவது பதவிகள் என்றும் மக்கள் அல்லர் என்றும் தாம் அறிவதாகத் தெரிவித்தார்.
ஆனால் அவருடன் மலேசியா வந்திருந்த பணியாளர்கள் சிலரே பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
உச்சநிலைக்கூட்டத்திற்குத் திரு ரூபியோவைத் தயார்ப்படுத்த அவர்கள் திறம்பட உழைத்தபோதும் அதற்கு எந்த மதிப்பும் அளிக்காமல் அவர்கள் கைவிடப்பட்டதாக அமெரிக்க நாடாளுமன்ற உதவியாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

