மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் கடந்த வாரம் முதல் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 64 பேர் உயிரிழந்ததாகவும் 65க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாகவும் திங்கட்கிழமையன்று (அக்டோபர் 13) அந்நாட்டு அரசு தெரிவித்தது.
மெக்சிகோவில் பெய்துவரும் கனமழை இவ்வளவு பெரிய சேதத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கவில்லை எனச் செய்தியாளர் சந்திப்பில் அந்நாட்டு அதிபர் கிளாடியா ஷீன்பாம் தெரிவித்தார்.
தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் ஆறுகள் நிரம்பியதாகவும் அதன் விளைவாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாகவும் அந்நாட்டுக் கடற்படை செயலாளர் அட்மிரல் ரேமுண்டோ மோரலிஸ் கூறினார்.
கிட்டத்தட்ட 100,000 வீடுகள் சேதமடைந்துள்ளன என்றார் அவர்.
அவற்றை மறுசீரமைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்வது குறித்து அந்நாட்டு நிதி அமைச்சுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
கடுமையாகப் பாதிக்கப்பட்ட சில மாநிலங்களையும் அவர் பார்வையிடவுள்ளதாகத் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.