தலைப்புச் செய்தி

சிங்கப்பூரர் அல்லாத அல்லது புதிதாக சிங்கப்பூருக்கு வரும் இந்தியர்களுக்கும் சிங்கப்பூர் இந்தியர்களுக்கும் இடையிலான தொடர்புகளை வலுப்படுத்தும் வழிகளைக் கண்டறியவேண்டும் என்றும் திறமைவாய்ந்த பல இந்தியர்கள் சிங்கப்பூரில் பணியாற்றுவது நாட்டிற்குப் பெரும் நன்மை என்றும் பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.
பிரதமராக திரு லாரன்ஸ் வோங் பதவி ஏற்றதும் அவரது புதிய அமைச்சரவையில் திரு லீ சியன் லூங் மூத்த அமைச்சராகப் பொறுப்பு வகிப்பார். மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன் அதே பொறுப்பில் தொடர்ந்து சேவையாற்றுவார்.
தமிழ் முரசு நாளிதழின் ஆசிரியராக 61 வயது த.ராஜசேகர் ஏப்ரல் 1ஆம் தேதி பொறுப்பேற்கிறார்.
தைப்பூசம் சிங்கப்பூரின் பல்லின பலசமய கலாசாரத்தைப் பறைசாற்றும் தனித்துவமான ஓர் அடையாளம் என்றார் தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ.
கடந்த 14 ஆண்டுகளாகக் காவடி எடுக்கும் பால் சிங்கிற்கு உறுதுணையாக இருந்துள்ளார் அவரின் பால்ய நண்பர் லயனல் டான், 35. பால் சிங்கின் மூன்றடுக்குக் காவடியை ஆண்டுதோறும் கட்டுவது இவரின் வழக்கமாகிவிட்டது.