தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தமிழகத்தில் வெறிநாய்க்கடியால் 4.8 லட்சம் பேர் பாதிப்பு; 40 பேர் உயிரிழப்பு

1 mins read
cad02f99-41b9-4ef7-b98a-9e0db51fcb8c
கடந்த ஆண்டு மட்டும், தமிழகத்தில் 480,000 பேர் நாய்க்கடிக்கு ஆளாகி உள்ளனர். அவர்களில் 40 பேர் ‘ரேபிஸ்’ நோய்க்கு ஆளாகினர். - சித்திரிப்புப்படம்: ஊடகம்

சென்னை: கடந்த ஆறு மாதங்களில் மட்டும், தமிழகத்தில் வெறிநாய்க்கடிக்கு ஆளானவர்களில் 18 பேர் ‘ரேபிஸ்’ பாதிப்பால் உயிரிழந்துவிட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

எனவே, நாய்கள் உட்பட எந்த விலங்கு கடித்தாலும், உரிய சிகிச்சை பெற வேண்டியது அவசியம் என சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

தமிழகம் முழுவதும் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. சாலைகளில் சுற்றித்திரியும் நாய்கள், முறையாகப் பராமரிக்கப்படாத செல்லப் பிராணிகளால் பொதுமக்கள் பல வகையிலும் பாதிக்கப்படுகிறார்கள்.

வெறிநாய்க்கடி பாதிப்பில் இருந்து தப்பிக்க, ‘ரேபிஸ்’ தடுப்பூசி உள்ள போதிலும், பல தெருநாய்களுக்கும் செல்லப் பிராணிகளுக்கும் முறையாகத் தடுப்பூசி செலுத்தப்படுவதில்லை. இதனால் வெறிநாய்க்கடிக்கு ஆளாவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கடந்த ஆண்டு மட்டும், தமிழகத்தில் 480,000 பேர் நாய்க்கடிக்கு ஆளாகி உள்ளனர். அவர்களில் 40 பேர் ‘ரேபிஸ்’ நோய்க்கு ஆளாகினர்.

சேலம், செங்கல்பட்டு, தஞ்சாவூர், திருச்சி, கன்னியாகுமரி ஆகிய ஐந்து மாவட்டங்களில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கும் அதிகாரிகள், சேலத்தில் மட்டும், 20 ஆயிரம் பேர் நாய்க்கடிக்கு சிகிச்சை பெற்றதாகக் கூறினர்.

சென்னையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,000ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், கடந்த ஆறு மாதங்களில், ரேபிஸ் பாதிப்பால் தமிழகத்தில் 18 பேர் உயிரிழந்துவிட்டனர்.

குறிப்புச் சொற்கள்