சென்னை: தமிழக அரசுக்குச் சொந்தமான டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடிக்கு முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், இந்த முறைகேட்டில் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் திரைப்பட தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
இது அமலாக்கத்துறைக்கு பின்னடைவை ஏற்படுத்தி இருப்பதாகக் கருதப்படுகிறது.
அண்மையில், மேற்குறிப்பிட்டவர்களின் வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு, பல்வேறு முக்கியமான ஆவணங்களைக் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கைக்கு எதிராக இருவரும் உயர் நீதிமன்றத்தை அணுகினர்.
இவர்களின் மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு, வீடு, அலுவலகங்களுக்கு சீல் வைக்கும் அதிகாரம் அமலாக்கத்துறைக்கு உள்ளதா எனக் கேள்வி எழுப்பினர்.
மேலும், டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக மனுதாரர்களுக்கு எதிராக எந்த ஆதாரங்களும் அமலாக்கத்துறையினரால் தாக்கல் செய்யப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினர்.
“எனவே, ஆதாரமின்றி மனுதாரர்களின் வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடத்தவும் மின்னணு சாதனங்களை பறிமுதல் செய்யவும் அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை.
தொடர்புடைய செய்திகள்
“இந்த சோதனையின் அடிப்படையில், மனுதாரர்களுக்கு எதிராக அமலாக்கத்துறை மேல் நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை விதிக்கிறோம்,” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.