சூறைக்காற்றுடன் கனமழை; தரையிறங்க முடியாமல் தவித்த விமானங்கள்

1 mins read
d818e564-eb41-4942-9fd3-963a1ff91bf3
சென்னையில் பெய்த கனமழையால் விமானச் சேவை பாதிப்பு. - கோப்புப் படம்: ஊடகம்

சென்னை: சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 5) மாலை பெய்த கனமழையால் கிட்டத்தட்ட 10 விமானங்கள் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமிட்டபடி இருந்தன.

இலங்கையிலிருந்து சென்னை வந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் உட்பட புதுடெல்லி, மும்பை, கொச்சி, கோவா, மதுரை, திருச்சி, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களிலிருந்து வந்த 10 விமானங்கள் திரையிறங்குவதில் சிரமத்தை எதிர்கொண்டன.

மழை பொழிவு சற்று குறைந்த பிறகு, ஒன்றன் பின் ஒன்றாக அவை தரையிறங்கின.

அதேபோல் சென்னையிலிருந்து அபுதாபி, மஸ்கட், புதுடெல்லி, மும்பை, ஹைதராபாத் பெங்களூரு, தூத்துக்குடி உள்ளிட்ட நகரங்களுக்குப் புறப்படவிருந்த விமானங்கள் தாமதங்களைச் சந்தித்தன.

இலங்கையிலிருந்து 149 பயணிகளுடன் சென்னை வந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் பலத்த சூறைக்காற்று காரணமாக பெங்களூருக்குத் திருப்பி அனுப்பப்பட்டது.

குறிப்புச் சொற்கள்