சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி குறித்து திமுகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு அவதூறாக கேலிச்சித்திரம் வெளியிட்டதாக சர்ச்சை வெடித்துள்ளது.
இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட திமுக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அதிமுக சார்பில் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இபிஎஸ் குறித்த அக்குறிப்பிட்ட கேலிச்சித்திரம், அண்மையில் சமூக ஊடகங்களில் வெளியானது. இதை திமுகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவுதான் இணையத்தில் பரவலாகப் பகிர்ந்ததாக அதிமுக குற்றஞ்சாட்டியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில், திமுகவினர் செயல்பட்டுள்ளதாக அதிமுக அளித்த புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.