டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இறுதியாட்டத்தில் தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா

1 mins read
d78849d2-8656-4202-82f7-50b62c1abead
லார்ட்ஸ் ஆடுகளத்தை ஆராயும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள். - படம்: ராய்ட்டர்ஸ்

லண்டன்: டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் உலக டெஸ்ட் சாம்பியன்‌ஷிப் கிண்ணத்திற்கான இறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணியும் ஆஸ்திரேலியா அணியும் மோதுகின்றன.

ஆட்டம் லார்ட்ஸ் விளையாட்டரங்கில் ஜூன் 11ஆம் தேதி முதல் நடக்கிறது.

நடப்பு வெற்றியாளரான ஆஸ்திரேலியா கிண்ணத்தை தக்கவைத்துக்கொள்ளக் கடுமையாகப் போராடக்கூடும்.

சில மாதங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அசத்தலாக விளையாடியது. அந்த நம்பிக்கையில் தற்போது அது தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.

டெஸ்ட் சாம்பியன்‌ஷிப் கிண்ணத்தில் முதல்முறையாக இறுதியாட்டத்தில் விளையாடும் தென்னாப்பிரிக்கா எப்படியாவது கிண்ணத்தை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது.

தென்னாப்பிரிக்கா கடந்த சில மாதங்களாக டெஸ்ட் ஆட்டங்களில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

அனைத்துலக கிரிக்கெட் சங்கத்தின் போட்டிகளில் தென்னாப்பிரிக்கா கிண்ணம் வென்று பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அதனால் இந்த இறுதி ஆட்டத்தில் தனது முழுபலத்தையும் அது காட்டக்கூடும்.

பந்துவீச்சாளர்களுக்கான டெஸ்ட் தரவரிசையில் உள்ள முதல் 10 வீரர்களில் ஐந்து பேர் இந்த ஆட்டத்தில் விளையாடுகின்றனர். இதனால் ஆட்டத்தில் அனல் பறக்கலாம் என்று கிரிக்கெட் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

அனுபவம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணித் தலைவர் பேட் கம்மின்ஸ் அமைதியான தென்னாப்பிரிக்க அணித் தலைவர் டென்டா பவுமாவை திட்டமிட்டு வீழ்த்துவார் என்று கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்