சிங்கப்பூர் காற்பந்துக் குழுவினருக்கு $2 மில்லியன் வழங்குதொகை

1 mins read
b34a0857-9486-4cda-9302-d1eff31dcf06
வெற்றிக் களிப்புடன் நாடு திரும்பிய சிங்கப்பூர் ஆட்டக்காரர்களை வரவேற்க அவர்களது குடும்பத்தினரும் ஆதரவாளர்களும் சாங்கி விமான நிலையத்தின் முனையம் 2ல் புதன்கிழமையன்று (நவம்பர் 19) கூடினர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஆசியக் கிண்ணக் காற்பந்துப் போட்டிக்குச் சிங்கப்பூர் குழு தகுதி பெற்றுள்ளது.

செவ்வாய்க்கிழமை (நவம்பர் 18) நடைபெற்ற ஆட்டத்தில் ஹாங்காங்கை 2-1 எனும் கோல் கணக்கில் சிங்கப்பூர் தோற்கடித்தது.

இதன்மூலம் 2027ஆம் ஆண்டு சவூதி அரேபியாவில் நடைபெறும் ஆசியக் கிண்ணக் காற்பந்துப் போட்டிக்குச் சிங்கப்பூர் தகுதி பெற்றது.

இந்நிலையில், வரலாறு படைத்த சிங்கப்பூர் குழுவுக்கு ஏறத்தாழ $2 மில்லியன் வழங்குதொகை அளிக்கப்படும் என்று சிங்கப்பூர் காற்பந்துச் சங்கத்தின் தலைவர் ஃபாரஸ்ட் லீ அறிவித்துள்ளார்.

வெற்றிக் களிப்புடன் நாடு திரும்பிய சிங்கப்பூர் ஆட்டக்காரர்களை வரவேற்க அவர்களது குடும்பத்தினரும் ஆதரவாளர்களும் சாங்கி விமான நிலையத்தின் முனையம் 2ல் புதன்கிழமையன்று (நவம்பர் 19) கூடினர்.

குறிப்புச் சொற்கள்