தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அனைத்துலக டி20 போட்டிகளிலிருந்து கேன் வில்லியம்சன் ஓய்வு

1 mins read
801f9dcb-b0af-4b39-8933-d19baa7ee118
35 வயது வில்லியம்சன் 2011 அக்டோபரில் அறிமுகமானதிலிருந்து நியூசிலாந்துக்காக 93 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.  - படம்: ராய்ட்டர்ஸ்

சிட்னி: பல மாதங்களாக நீடித்துவந்த ஊகங்களுக்குப் பிறகு, நியூசிலாந்து அணியின் முன்னாள் தலைவர் கேன் வில்லியம்சன் அனைத்துலக டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 

ஆயினும், நியூசிலாந்து சார்பில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாட விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார். 

அவ்வகையில், வரும் டிசம்பரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வில்லியம்சன் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

35 வயது வில்லியம்சன் 2011 அக்டோபரில் அறிமுகமானதிலிருந்து நியூசிலாந்துக்காக 93 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

காயம் காரணமாக ஆஸ்திரேலிய, இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக இம்மாதம் நடைபெற்ற டி20 தொடர்களில் அவர் இடம்பெறவில்லை.

குடும்பத்துடன் கூடுதல் நேரம் செலவு செய்ய ஆசைப்படுவதாக வில்லியம்சன் தொடர்ந்து கூறி வருகிறார்.

குறிப்புச் சொற்கள்