புதுடெல்லி: தடை செய்யப்பட்ட மருந்தைப் பயன்படுத்தியதாகத் தெரியவந்ததைத் தொடர்ந்து இந்திய திடல்தட வீராங்கனை டுவிங்கிள் சவுத்ரி தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
28 வயதாகும் டுவிங்கிள் சவுத்ரி, இந்த ஆண்டு உத்தராகண்டில் நடைபெற்ற தேசிய விளையாட்டுப் போட்டியின் 4x400 மீட்டர் மகளிர் தொடர் ஓட்டத்தில் தங்கம் வென்றிருந்தார். மேலும், 4x400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்திலும் வெண்கலமும், 800 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளியும் அவர் வென்றிருந்தார்.
இந்நிலையில் அவர் தடை செய்யப்பட்ட மருந்தைப் பயன்படுத்தியதாகக் கூறி திடல்தட ஒருங்கிணைப்புப் பிரிவு (ஏஐயு) அவரை தற்காலிக நீக்கம் செய்ய வெள்ளிக்கிழமை (ஜூன் 27) உத்தரவிட்டது. தடை செய்யப்பட்ட மெத்தில் டெஸ்டோஸ்டெரான் என்ற மருந்தை அவர் உட்கொண்டிருந்தார்.
தற்காலிக நீக்க உத்தரவைத் தொடர்ந்து, அவருக்கு ஏஐயு சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து விசாரணைக் குழு முன்பு டுவிங்கிள் சவுத்ரி முன்னிலையாகி தனது விளக்கத்தை அளிக்கவேண்டும் என்றும் ஏஐயு உத்தரவிட்டுள்ளது.