கோல் மழை; உலகக் கிண்ணப் போட்டியில் ஜெர்மனி

1 mins read
a2e1ec50-cc5b-423e-ba35-f89f15377df6
ஆறு கோல்களைப் போட்டு கோல் மழையில் நனைந்த ஜெர்மானிய ஆட்டக்காரர்கள். - படம்: ராய்ட்டர்ஸ்

லேய்ப்ஸிக்: உலகக் கிண்ண காற்பந்துப் போட்டிக்கு ஜெர்மனி தகுதி பெற்றுள்ளது.

திங்கட்கிழமையன்று (நவம்பர் 17) நடைபெற்ற தகுதிச் சுற்று ஆட்டத்தில் சிலோவாக்கியாவை அது 6-0 எனும் கோல் கணக்கில் தோற்கடித்தது.

ஜெர்மனிக்காக கோல் போட்டவர்களில் நிக் வோல்ட்டமாடவும் ஒருவர்.

இவர் இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியில் நியூகாசலுக்காக விளையாடுபவர்.

தகுதிச் சுற்றில் சிறப்பாக விளையாடியுள்ள வோல்ட்டமாட, உலகக் கிண்ணப் போட்டியில் களமிறங்கும் ஜெர்மனிக் குழுவில் இடம்பெற இலக்கு கொண்டுள்ளார்.

உலகக் கிண்ண காற்பந்துப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளதில் அவர் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தார்.

‘ஏ’ பிரிவில் ஜெர்மனி முதலிடம் பிடித்தது.

சிலோவாக்கியா இரண்டாவது இடத்தைப் பிடித்தது.

இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் குழுக்கள் அடுத்த ஆண்டு மார்ச் மாதம், ‘பிளே ஆஃப்’ சுற்றில் விளையாடும்.

அதில் வெற்றி பெறும் குழுக்கள் உலகக் கிண்ணப் போட்டிக்குத் தகுதி பெறும்.

குறிப்புச் சொற்கள்