ஒர்லாண்டோ: கிளப் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் மான்செஸ்டர் சிட்டியை சவூதி அரேபியாவின் அல் ஹலிலால் 4-3 எனும் கோல் கணக்கில் வீழ்த்தியது.
நடப்பு வெற்றியாளர் சிட்டியின் இந்த எதிர்பாராத் தோல்வி அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
வெற்றி பெற்ற அல் ஹிலால் காலிறுதி ஆட்டத்துக்குத் தகுதி பெற்றுள்ளது.
ஆட்டம் 2-2 எனும் கோல் கணக்கில் சமநிலையில் முடிந்ததை அடுத்து, வெற்றியாளரை நிர்ணயிக்க கூடுதல் நேரம் விளையாடப்பட்டது.
கூடுதல் நேரத்தில் அல் ஹிலால் இரண்டு கோல்களும் சிட்டி ஒரு கோலும் போட்டன.
கடுமையாகப் போராடி சிட்டியைத் தோற்கடித்தது, உயிர்வாயு இல்லாமல் எவரெஸ்ட் மலையை ஏறுவது போல் இருந்ததாக அல் ஹிலால் குழுவின் பயிற்றுவிப்பாளர் சிமியோனே இன்சாகி தெரிவித்தார்.
யாரும் எதிர்பார்க்காத இந்த வெற்றிக்குத் தமது ஆட்டக்காரர்களின் முனைப்பும் கடுமையான உழைப்பும் காரணம் என்றார் அவர்.