இளம் மலாய், முஸ்லிம் தலைவர்கள் தொடர்புகளை ஏற்படுத்துவதற்காக முன்வைக்கும் புதிய யோசனைகளும் வழிகளும் சமூகத்தையும் சிங்கப்பூரையும் முன்னேற்றிவிடும் என்று முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சர் ஃபைஷால் இப்ராஹிம் கூறியுள்ளார்.
யயாஸான் மெண்டாக்கி என்ற சுய உதவி குழுவைக் குறிப்பிட்டு ஃபேஸ்புக்கில் ஜூன் 14 வெளியிட்ட காணொளியில் இணை பேராசிரியர் பைஷால் பேசினார்.
மலாய்-முஸ்லிம் சமூகத்தின் வெற்றிக்கு வழியமைக்கும் முக்கிய கழகமாக யாயாஸான் மெண்டாக்கி இருந்தாலும் அரசாங்கமும் சமூகத் தலைவர்களும் வசதி குறைந்த பின்னணியிலிருந்து வருவோரை முன்னேற்றிவிட உதவியுள்ளன என்றார் பேராசிரிசியர் ஃபைஷால்.
“அனைவரின் ஈடுபாடு, ஒற்றுமை, பல பங்குதாரர்களின் துடிப்பான ஆதரவு ஆகியவற்றால்தான் நாம் வலுவாக இருக்கிறோம்,” என்று அவர் குறிப்பிட்டார்.
பேராசிரியர் ஃபைஷால் மெண்டாக்கியின் தலைவராகத் தொடரும் திரு ஸாக்கி முகமதுக்கும் நன்றி கூறினார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் திரு ஸாக்கியின் துடிப்புமிக்க வழிகாட்டுதலால் மெண்டாக்கி திறன் வளர்ச்சி, நிபுணத்துவம் ஆகியவற்றில் பெரிய மாற்றங்களைக் கண்டுள்ளதாகவும் பேராசிரியர் ஃபைஷால் குறிப்பிட்டார்.
“நமது சமூகத்தை ஒன்றிணைந்து முன்னேற்றுவோம்,” என்ற அவர், பெற்றோர், மாணவர்கள், ஊழியர்கள், நிபுணர்களுக்கு ஒன்றிணைந்து தொடர்ந்து உதவ வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.