தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாட்டாளிக் கட்சியின் மத்திய செயற்குழுவில் புதிய முகங்கள்

1 mins read
f1ad55a4-af15-45de-ae79-9d40f85c3e4b
பாட்டாளிக் கட்சி செயற்குழுவில் இடம்பெறும் (மேல் இடது பக்கத்திலிருந்து) அப்துல் முஹாய்மின் அப்துல் மாலிக், கென்னத் தியோங், ஐலீன் சோங், ஆண்ட்ரே லோ. - படங்கள்: பாட்டாளிக் கட்சி

பாட்டாளிக் கட்சியின் மத்திய செயற்குழுவில் நான்கு புதிய முகங்கள் இடம்பெறுகின்றனர்.

நியமிக்கப்பட்டவர்களில் இரண்டு புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் இரண்டு புதிய தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர்களும் அடங்குவர்.

செங்காங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் முஹாய்மின் அப்துல் மாலிக் துணை ஏற்பாட்டுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். துணைப் பொருளாளராக அல்ஜுனிட் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கென்னத் தியோங் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தத் தகவல்களைப் பாட்டாளிக் கட்சி புதன்கிழமை (ஜூன் 18) வெளியிட்டது.

தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் ஐலீன் சோங், பாட்டாளிக் கட்சி இளையரணியின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.

இதற்கு முன்பு செங்காங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் அப்பதவியை வகித்தார்.

மற்றொரு தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினரான ஆண்ட்ரே லோ, பாட்டாளிக் கட்சி ஊடகக் குழுவின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

செயற்குழுவின் மற்ற பதவிகளைப் பொறுத்தவரை மாற்றங்கள் ஏதுமில்லை.

கட்சியின் தலைமைச் செயலாளராக பிரித்தம் சிங்கும் தலைவராக சில்வியா லிம்மும் தொடர்கின்றனர்.

குறிப்புச் சொற்கள்
பாட்டாளிக் கட்சிசெயற்குழுநாடாளுமன்ற உறுப்பினர்