மோசடிப் பணம் உள்ளிட்ட $640.70 மில்லியன் தொகையை வரவாகப் பெற்ற வங்கிக் கணக்குகளுக்குச் சொந்தமான பெண்ணுக்கு ஓராண்டு, ஆறு மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
சிங்கப்பூரரான ஸின் நிவே நியுன்ட், 58, எனப்படும் அந்தப் பெண் யுனிஒன் (Unione) என்னும் மொத்த விற்பனை வர்த்தக நிறுவனத்தைத் தொடங்கினார்.
தமது வங்கிக் கணக்குகளுக்கு எங்கிருந்து அவ்வளவு பெரிய தொகை வந்தது எனத் தெரியவில்லை என அவர் நீதிமன்றத்தில் கூறினார்.
முன்னதாக, 2021 ஆகஸ்ட்டில் இது தொடர்பாக நீதிமன்றத்தில் சில விவரங்கள் தெரிவிக்கப்பட்டன.
ஆஸ்திரேலிய முதலீட்டு மோசடியில் ஏமாந்த ஒருவர் சிங்கப்பூரில் உள்ள நிறுவனங்களால் நிர்வகிக்கப்படும் பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு US$1.8 மில்லியன் தொகையை அனுப்பினார்.
அவற்றில் மூன்று நிறுவனங்கள் யுனிஒன் நிறுவனத்திற்குச் சொந்தமான வங்கிக் கணக்கிற்கு $480,000க்கும் மேற்பட்ட பணத்தை அனுப்பின.
கடந்த மார்ச் மாதம் தமது கணவரின் நீண்டகால நண்பரான மியன்மார் நாட்டவருடன் இணைந்து உரிமமின்றி பணம் அனுப்பும் சேவையை சிங்கப்பூரில் நடத்திய குற்றத்தை அந்தப் பெண் ஒப்புக்கொண்டார்.
அந்தச் சேவைக்கான தரகுத் தொகையாக $170,000க்கு மேல் அவர் பெற்றிருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூர் நிரந்தரவாசியான அந்த 61 வயது மியன்மார் நாட்டவர் இதேபோன்ற குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து ஜூலை 30ஆம் தேதி அவருக்கான தண்டனை அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

