ராஃபிள்ஸ் பிளேஸ் ரயில் நிலையத்தில் நீர்க்கசிவு

1 mins read
dea25cc0-81ee-49dc-b297-2c5d8eddafec
நடைமேடையிலிருந்து நீர் மற்ற பகுதிகளுக்குப் பரவாமல் இருக்கத் தடுப்புகள் அமைக்கப்பட்டன நீர்ச் சேமிப்புத் தொட்டிகளும் அமைக்கப்பட்டன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

புதன்கிழமை (செப்டம்பர் 17) காலை ராஃபிள்ஸ் பிளேஸ் ரயில் நிலையத்தின் சில மேற்கூரைகளில் நீர்க்கசிவு ஏற்பட்டது.

காலை 9 மணிவாக்கில் இது நேர்ந்ததாகச் சமூக ஊடகம் வழியாக இணையவாசிகள் கூறினர். நீர்க்கசிவு மழை பெய்யும்போது வரும் சத்தத்தைப் போல் இருந்ததாக அவர்கள் குறிப்பிட்டனர். துர்நாற்றம் ஏதும் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

நீர்க் கசிவு காரணமாக வடக்கு-தெற்கு ரயில் பாதையில் உள்ள பயணிகள் நடைமேடையின் ஒரு பகுதியில் தடுப்புகள் போடப்பட்டன.

பயணிகள் பாதிக்கப்பட்ட இடத்திற்குச் செல்லாமல் இருக்க எஸ்எம்ஆர்டி நிறுவன ஊழியர்கள் உதவினர்.

பிற்பகல் நேரத்தில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் சம்பவ இடத்திற்குச் சென்றது. அப்போதும் மேற்கூரையிலிருந்து நீர் வடிந்ததைக் காணமுடிந்ததாக அது குறிப்பிட்டது.

நடைமேடையிலிருந்து நீர் மற்ற பகுதிகளுக்குப் பரவாமல் இருக்கத் தடுப்புகள் அமைக்கப்பட்டன; நீர்ச் சேமிப்புத் தொட்டிகளும் வைக்கப்பட்டன. மேலும் பாதிக்கப்பட்ட இடத்திற்கு அருகில் உள்ள மின்படிகளும் நிறுத்தப்பட்டன.

தற்போதைய நிலவரம் சமாளிக்கக்கூடிய நிலையில் உள்ளது, ஆனால் மாலை நேரத்தில் குறிப்பாக உச்ச நேரத்தில் பயணிகளுக்கு இது இடையூறாக மாறும் என்று ரயில் பயணி மாயா அப்துல்லா செய்தியாளரிடம் கூறினார்.

நீர்க் கசிவு குறித்து எஸ்எம்ஆர்டியிடம் மேல்விவரங்கள் கேட்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்