தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
மின்சிகரெட் குற்றங்களுக்குக் கடுமையான தண்டனை குறித்து ஆராயும் சுகாதார அறிவியல் ஆணைய வழக்கறிஞர்

மின்சிகரெட் விற்பனை: ஆடவருக்கு எதிரான தீர்ப்பு ஒத்திவைப்பு

2 mins read
50b75f03-507c-474e-9eac-0ea154cf005c
மின்சிகரெட்டுகளை விற்றது, அவற்றை வைத்திருந்தது தொடர்பில் இரண்டு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்ளவிருந்த ஒரிசன் டோ சுன் கீ. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மின்சிகரெட்டுகள் தொடர்பான குற்றங்களுக்குக் கடுமையான தண்டனையைக் கோரவிருப்பதாகச் சுகாதார அறிவியல் ஆணையத்தின் வழக்கறிஞர் கூறியதை அடுத்து குற்றம் புரிந்தவருக்கு எதிரான தீர்ப்பை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

மின்சிகரெட்டுகளை விற்றது, அவற்றை வைத்திருந்தது என இரண்டு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் 28 வயது ஒரிசன் டோ சுன் கீ, நீதிமன்றத்தில் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 25) குற்றங்களை ஒப்புக்கொள்ளவிருந்தார்.

மின்சிகரெட்டை வாங்க விரும்பிய ஒருவரை கடந்த ஆண்டு ஜூலை 30ஆம் தேதி டெலிகிராம் மூலம் டோ தொடர்புகொண்டதாக நம்பப்படுகிறது.

கடந்த ஆண்டு செப்டம்பர் 3ஆம் தேதி டோவின் காரில் 1,533க்கும் அதிகமான மின்சிகரெட்டுகளும் பயன்படுத்தியவுடன் வீசக்கூடிய 106 மின்சிகரெட்டுகளும் இருந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.

அது தொடர்பாக நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது சுகாதார அறிவியல் ஆணைய வழக்கறிஞர் ஜோலீன் சியா, தமது தரப்பு தண்டனை விதிப்பு தொடர்பான கோரிக்கையை மறுஆய்வு செய்யவிரும்புவதாகக் குறிப்பிட்டார்.

மின்சிகரெட்டுகள், கேபோட்ஸ் எனப்படும் எட்டோமிடேட் கலந்த மின்சிகரெட்டுகள் ஆகியவை தொடர்பிலான குற்றங்களுக்கான தண்டனையை மறுஆய்வு செய்யும்படி சுகாதார அறிவியல் ஆணையத்துக்கு மாவட்ட நீதிபதி வோங் லி டெயின் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்ததாகவும் அவர் கூறினார்.

மின்சிகரெட் தொடர்பான குற்றங்கள் அதிகரித்துவரும் சூழலில் இதற்குமுன் நிகழ்ந்த சம்பவங்களின் அடிப்படையில் தீர்ப்பு வழங்குவது பொருத்தமற்றது என்று ஆகஸ்ட் 21ஆம் தேதி மாவட்ட நீதிபதி கூறியிருந்தார்.

“நீதிபதி வோங்கின் உத்தரவின்படி நாங்கள் இன்னும் கடுமையான தண்டனையை முன்மொழியலாம். அதற்குமுன் ஒட்டுமொத்த தண்டனைகளை மீண்டும் ஆராய வேண்டும்,” என்று வழக்கறிஞர் சியா சொன்னார்.

தொடக்கத்தில் டோவிற்கு ஒரு வாரச் சிறைத் தண்டனையுடன் அபராதமும் விதிக்கப்படும்படி சுகாதார அறிவியல் ஆணையத் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.

ஆனால், டோ குற்றத்தை ஒப்புக்கொள்வதாக ஜூலை மாதத்திலேயே கூறியிருந்ததால் வழக்கை ஒத்திவைக்க சுகாதார அறிவியல் ஆணையத் தரப்பு கேட்டுக்கொண்டதைத் தற்காப்பு வழக்கறிஞர் எதிர்த்தார்.

எனினும், சுகாதார அறிவியல் ஆணையத் தரப்பின் வாதத்தை ஒப்புக்கொள்வதாகக் கூறிய மாவட்ட நீதிபதி வோங் பெக், மின்சிகரெட்டுகள் குறித்த ஒட்டுமொத்த நிலைப்பாடு மறுஆய்வு செய்யப்படுவதாகக் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்