ஒரே வீவக வீட்டில் மூன்று சொகுசுக் கார் உரிமையாளர்கள்: அமைச்சர்

2 mins read
942d5da3-e1ba-462c-ace0-a4e21cbee315
தோ பாயோவில் திறந்தவெளி கார்நிறுத்துமிடத்தில் கார்கள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளில் வசிக்கும் 2,000 குடும்பங்களில் ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது மூன்று தனித்தனிக் கார் உரிமையாளர்கள் உள்ளனர் என்று தற்காலிக போக்குவரத்து அமைச்சர் ஜெஃப்ரி சியாவ் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஒப்புநோக்க 9,000 வீவக அல்லாத தனியார் வீடுகளில் வசிக்கும் குடும்பங்கள் மூன்று கார்களை வைத்துள்ளன.

பயனீர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பெட்ரிக் டே, வீடுகளின் மாதிரியின் அடிப்படையில் கார் உரிமையாளர்களின் விவரங்களை நாடாளுமன்றத்தில் கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்து இவ்வாண்டு செப்டம்பர் மாதம் வரையிலான வீவக, வீவக அல்லாத வீடுகளின் வாகன உரிமையாளர்கள் புள்ளி விவரங்களை அமைச்சர் வெளியிட்டார்.

ஒரு வீவக வீட்டில் வசிக்கும் குடும்பம் ‘மெர்சிடிஸ்’, ‘அவ்டி’, ‘அல்ஃபா ரோமியோ’ என மூன்று அதிநவீன சொகுசுக் கார்களை வைத்திருந்ததும் தெரியவந்தது. செப்டம்பர் 30ஆம் தேதிவரை, 274,000 வீவக வீடுகளில் வாழும் குடும்பங்களும் 207,000 வீவக அல்லாத வீடுகளில் வாழும் குடும்பங்களும் ஒரு காரையாவது வைத்துள்ளன.

அதேவேளை, 20,000 வீவக குடும்பங்களிடமும் 46,000 வீவக அல்லாத குடும்பங்களிடமும் இரண்டு கார்கள் இருக்கின்றன.

குடியிருப்பாளர் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினர் பெட்ரிக் டேவிடம் ஒரு காருக்கு மேல் வைத்திருக்கும் குடும்பங்களின் விவரங்களோடு இரண்டாம் சொத்து வாங்குவோருக்கு விதிக்கப்படும் வரி (ABSD) போன்று சட்டம் அமைக்க முடியுமா என்று கேட்டிருந்தார். ஆகவேதான் கார் உரிமையாளர்களின் விவரங்களை அவர் நாடாளுமன்றத்தில் கேட்டதாகக் கூறினார்.

சிங்கப்பூரில் கார் வாங்குவோர் அதன் சந்தை மதிப்புக்கேற்ப கூடுதல் பதிவுக் கட்டணங்களைச் செலுத்துகின்றனர். எனவே, விலை மதிப்புமிக்க கார்களுக்கு உரிமையாளர்கள் அதிகமாகக் கட்டணம் கொடுக்கவேண்டியுள்ளது என்று தற்காலிக போக்குவரத்து அமைச்சர் விளக்கினார்.

பொதுப் போக்குவரத்து தேர்வுகள் சிறந்த வகையில் இருந்தாலும் வீவக வீடுகளின் கார் உரிமையானது, வேலையினாலும் தனிப்பட்டோரின் வாழ்வியலினாலும் ஏற்படுகிறது.

இந்தப் போக்கு விலைவாசி உயர்வு, பொதுப் போக்குவரத்து மேம்பாடு, அரசாங்கத்தின் கொள்கை ஆகியவற்றால் நெடுநாள் நீடிக்காது என்றனர் நிபுணர்கள்.

குறிப்புச் சொற்கள்