‘லாங் ஐலண்ட்’ நிலமீட்புக்கான மறுஆய்வுப் பணிகள் ஆகஸ்ட் மாதம் தொடங்கின. இதற்காக ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா அருகில் உள்ள கடற்பகுதிகள் ஆய்வு செய்யப்படுகின்றன.
ஆய்வுப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படும் படகுகள் அருகில் செல்ல வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
படகுகள் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது கரையிலிருந்து ஏறத்தாழ 100 மீட்டர் தூரத்தில் பெரிய அகன்ற படகுகள் நிறுத்திவைக்கப்படும்.
ஆய்வுப் பணிகளில் ஈடுபடும் படகுகள் அருகில் யாரும் அருகில் செல்லாதிருக்க இந்த ஏற்பாடு செய்யப்படுகிறது.
நீர் விளையாட்டுகளில் ஈடுபடுவோர் இந்தப் படகுகள் இருக்கும் இடத்திலிருந்து குறைந்தது 50 மீட்டரிலிருந்து 100 மீட்டர் தூரத்தில் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த ஆய்வுப் பணிகள் மூலம் கிடைக்கும் தகவல்கள், ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா அருகில் உள்ள கடற்பகுதியில் 800 ஹெக்டர் பரப்பளவு நிலத்தை அமைக்க தேவையான விரிவான வடிவமைப்புக்கும் திட்டமிடுதலுக்கும் வழிகாட்டியாக அமையும் என்று நகர மறுசீரமைப்பு ஆணையம் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 25) தெரிவித்தது.
இது மரினா பேயின் பரப்பளவைவிட இரு மடங்கு அதிகம்.
லாங் ஐலண்ட் திட்டம் நிறைவுபெற்றதும் உயரும் கடல் மட்டத்திலிருந்து அது சிங்கப்பூரைப் பாதுகாக்கும். இதனால் வெள்ளம் ஏற்படுவதை அது தடுக்கும்.
தொடர்புடைய செய்திகள்
அதே சமயம் அங்கு புதிய வீடுகள் கட்டப்படுவதுடன் சிங்கப்பூரின் 18வது நீர்த்தேக்கம் போன்ற வசதிகள் அமைக்கப்படும்.
நடத்தப்படும் ஆய்வுப் பணிகள் சம்பந்தப்பட்ட கடற்புகுதியின் புவியியல் மற்றும் கடற்படுகையின் நிலையைக் கண்டறிய உதவும் என்றும் ஆணையம் தெரிவித்தது.
ஆய்வுப் பணிகள் சில மாதங்கள் நீடிக்கும் என்று ஆணையத்தின் இணையப்பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.