தேசிய தினத்தை ஒட்டி ரத்த தான இயக்கம்

1 mins read
8953090f-3402-48aa-bdf3-dfe703e61cb4
சன்லவ் இல்லத்தில் இடம்பெற்ற ரத்த நன்கொடை முகாம். - படம்: சன்லவ் இல்லம்

சீனப் புத்தாண்டுக்குமுன், தேசிய தினத்திற்குப்பின் என ஆண்டிற்கு இருமுறை ரத்த தான இயக்கத்துக்கு ஏற்பாடு செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளது சன்லவ் இல்லம்.

அவ்வகையில், புவாங்கோக் வட்டாரத்திலுள்ள சன்லவ் தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 15) ரத்த நன்கொடை முகாம் நடைபெற்றது. 

இல்ல ஊழியர்கள், பொதுமக்கள் என கிட்டத்தட்ட 150 பேர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

ரத்த வங்கியுடன் இணைந்து அந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ததாக சன்லவ் இல்லத்தின் தலைமைத் திட்ட அதிகாரி கே. ராஜமோகன் தெரிவித்தார். 

“ரத்தம் கொடுத்து உயிர்காக்கும் பணி மிக உன்னதமானது. இதனை நாங்கள் ஆண்டுதோறும் தொடரவுள்ளோம். இதற்கு ஆதரவு நல்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் என் நன்றி,” என்று அவர் கூறினார்.

இரண்டு தாதிமை இல்லங்களைக் கொண்டுள்ள சன்லவ், தன் பெயரில் பத்து நிலையங்களை நடத்துகிறது.

சிங்கப்பூரில் 11 ஆண்டுகளாகப் பணியாற்றும் தனபால் விமல்ராஜ், 31, கடந்த நான்கு, ஐந்து ஆண்டுகளாக சன்லவ் இல்லத்தில் ரத்த நன்கொடை அளித்துவருகிறார்.

“உயிர்களைக் காக்கும் சிறு உதவிதான் இது. இனி வரும் ரத்த தான இயக்கங்களிலும் பலரும் மனமுவந்து பங்கேற்க வேண்டும்,” என்று அவர் கேட்டுக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்