செங்காங்கில் புதிய குடியிருப்புப் பேட்டையில் 10,000 வீடுகள் கட்டப்படக்கூடும்

செங்காங்கில் உள்ள ஃபெர்ன்வெல் நார்த்தில், பெரிய பரப்பளவிலான நிலத்தில் ஏறக்குறைய 10,000 புதிய வீடுகள் கட்டப்படலாம்.

தெம்பனிஸ் விரைவுச்சாலைக்கு அருகில் உள்ள குடியிருப்புப் பகுதிக்கு முன்மொழியப்பட்ட திட்டங்கள் அவ்வாறு தெரிவிக்கின்றன.

ஏப்ரல் 29ஆம் தேதி நகர மறுசீரமைப்பு ஆணையத்தின் பெருந்திட்டத்திற்கு முன்மொழியப்பட்ட மாற்றம் ஒன்றில், புதிய குடியிருப்புப் பேட்டைக்கான மேம்பாட்டுக்கு, ஃபெர்ன்வெல் ஸ்திரீட்டுக்கும் தெம்பனிஸ் விரைவுச்சாலைக்கும் இடைப்பட்ட 18.9 ஹெக்டர் பரப்பளவிலான நிலத்தை ஆணையம் மாற்றி அமைக்கிறது.

தனியார் அல்லது பொதுத் திட்டங்கள் அமைந்திருக்கக்கூடிய அந்த நிலப்பகுதியில் பூங்காக்கள், வழிபாட்டுத் தலம், சுகாதார, மருத்துவ வசதி ஆகியவை இருக்கக்கூடும் என்பதை திட்டங்கள் காட்டுகின்றன.

முன்மொழியப்பட்ட மேம்பாடு அந்தப் பகுதியில் வீடமைப்புத் தேவைக்கு ஆதரவளிக்கும் என்று ஆணையம் கூறியது. அதோடு, தற்போதைய, எதிர்காலக் குடியிருப்பாளர்களுக்கு “வர்த்தக, பொழுதுப்போக்கு, சமூக வசதிகளோடு, பூங்காக்களுக்கு மேலும் எளிதில் செல்வதற்கான வசதியும், மேம்பட்ட சாலை ஒருங்கிணைப்பும்” வழங்கப்படும் என்று ஆனையம் கூறியது.

அந்த நிலப்பகுதி ஏறக்குறைய 35 காற்பந்துத் திடல்களின் அளவுக்குச் சமம்.

அந்தப் பகுதியில் 8,000 முதல் 12,000 வீடுகள் வரை கட்டப்படலாம் என்று சொத்து நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

தேவைக்கேற்பக் கட்டப்படும் வீடுகள், கூட்டுரிமை வீடுகள், எக்சிகியூட்டிவ் கூட்டுரிமை வீடுகள் ஆகியவை அந்தப் பகுதியில் கட்டப்படலாம் என்று ‘ஆரஞ்சுடீ குழுமத்தின்’ தலைமை ஆய்வாளரும், உத்திபூர்வ நிபுணருமான கிறிஸ்டின் சன் கூறினார்.

செங்காங்கில் 2019ஆம் ஆண்டில் கடைசியாகப் பொது வீடமைப்புத் திட்டம் நடத்தப்பட்டதால், அந்தப் பகுதியில் தேவைக்கேற்பக் கட்டப்படும் வீடுகளுக்கு அதிக தேவை இருக்கலாம் என்று அவர் கூறினார்.

இதற்கிடையே, ஃபெர்ன்வெல் நிலத்துக்கு அருகில் உள்ள சிலேத்தார் லிங்க் மேம்பாலம் ஜனவரி மாதம் திறக்கப்பட்டது. பொங்கோலில் புதிய மேம்பாடுகள் காரணமாக, அதிகப் போக்குவரத்து ஏற்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதால் ‘சிலேத்தார் லிங்க்’ஐயும் தெம்பனிஸ் விரைவுச்சாலையையும் அது இணைக்கிறது.

புதிய செங்காங் வெஸ்ட் டிரைவ் கட்டிமுடிக்கப்பட்டதும், அது செங்காங்கில் உள்ள மேம்பாடுகளையும் இணைக்கும்.

புக்கிட் பாஞ்சாங்கில், கிரீன்ரிட்ஜ் உயர்நிலைப் பள்ளி முன்னர் இருந்த பகுதியில் புதிய வீடுகள் கட்டப்படலாம். அந்தப் பள்ளி 2023ல் ஃபாஜார் உயர்நிலைப் பள்ளியுடன் சேர்க்கப்பட்டு, கங்சா ரோட்டிற்கு இடம் மாறியது.

வீடமைப்புத் தேவைக்கு ஆதரவு அளிக்கவும், அதிகமான குடியிருப்பாளர்கள் மேலும் எளிதில் வசதிகளையும் பொதுப் போக்குவரத்தைப் பெறுவதற்கும் வகைசெய்ய, அந்த 33,195 சதுரமீட்டர் பரப்பளவிலான நிலத்தை கல்வி வளாகத்திலிருந்து, குடியிருப்புப் பகுதியாக மாற்றி அமைப்பதற்கு ஆணையம் முன்மொழிந்திருந்தது.

அந்தப் பகுதியில் 700 வீடுகள் அல்லது 1,000 தனியார் வீடுகள் கட்டப்படலாம் என்று திருவாட்டி சுன் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!