‘ஸ்டார்ஹப்’ மூன்றாம் காலாண்டு லாபம் 35.3% சரிவு

1 mins read
8adc047f-5f51-4b49-b7a0-c1b19b89ca50
வருவாய் குறைந்ததே நிகர லாபச் சரிவுக்குக் காரணம் என வெள்ளிக்கிழமையன்று (நவம்பர் 14) ‘ஸ்டார்ஹப்’ கூறியது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஸ்டார்ஹப் தொலைத்தொடர்பு நிறுவனம் இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டில் தனது நிகர லாபம் 35.3 விழுக்காடு சரிந்ததாகத் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரையிலான மூன்றாம் காலாண்டில் ஸ்டார்ஹப் $40.4 மில்லியன் லாபம் ஈட்டியது. இவ்வாண்டு அதே காலாண்டில் அது $26.2 மில்லியனாகக் குறைந்துவிட்டது.

வருவாய் குறைந்ததே நிகர லாபச் சரிவுக்குக் காரணம் என அந்தத் தொலைத்தொடர்பு நிறுவனம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 14) கூறியது.

அந்நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு வருவாய் 4.3 விழுக்காடு குறைந்து $550.3 மில்லியனாக உள்ளது. இது முந்திய ஆண்டின் இதே காலத்தில் $575.2 மில்லியனாக இருந்தது.

கைப்பேசிச் சேவை, விரிவலைச் சேவை, பொழுதுபோக்குச் சேவை உள்ளிட்ட முக்கிய அம்சங்களின் வருவாய் கடந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டோடு ஒப்பிடும்போது சரிந்துள்ளதாகக் கூறப்பட்டது.

‘ஸ்டார்ஹப்’ நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டின் லாபம் குறித்து அறிவிப்பு வெளிவருவதற்கு முந்திய நாளான நவம்பர் 13ஆம் தேதி, அந்நிறுவனத்தின் பங்குகள் 0.9 விழுக்காடு அல்லது ஒரு விழுக்காடு சரிந்து $1.16 ஆக இருந்தது.

குறிப்புச் சொற்கள்