தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூரின் தொழில்துறை உற்பத்தி ஜூலையில் எதிர்பார்ப்பை விஞ்சி 7.1% வளர்ச்சி

1 mins read
657226ed-eb24-4366-919d-993693ed4876
முக்கிய மின்னணுத் துறையின் உற்பத்தி 13.1 விழுக்காடு விரிவடைந்தது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் தொழில்துறை உற்பத்தி எதிர்பார்த்ததைக் காட்டிலும் ஜூலை மாதம் அதிக வளர்ச்சி கண்டுள்ளது.

ஆண்டு அடிப்படையில் ஒட்டுமொத்த உற்பத்தி 7.1 விழுக்காடு உயர்ந்தது. புளூம்பெர்க் கருத்துக்கணிப்பில் பொருளியல் வல்லுநர்கள் முன்னுரைத்த 0.9 விழுக்காட்டு வளர்ச்சியைக் காட்டிலும் அது அதிகம். தொழில்துறை உற்பத்தி தொடர்ந்து 13ஆம் மாதமாகக் கூடியுள்ளது.

பொருளியல் வளர்ச்சிக் கழகம் அந்தத் தகவல்களைச் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 26) வெளியிட்டது.

உயிர்மருத்துவத் துறையைத் தவிர்த்துவிட்டுப் பார்க்கும்போது, உற்பத்தி 9.4 விழுக்காடு கூடியது.

மாதாந்தர அடிப்படையில் தொழில்துறை உற்பத்தி 8.2 விழுக்காடு ஏற்றங்கண்டது.

சிங்கப்பூரின் ஒட்டுமொத்த உற்பத்தியில் மின்னணுத் துறை 35 விழுக்காட்டுக்கும் மேல் பங்கு வகிக்கிறது. அதன் உற்பத்தி 13.1 விழுக்காடு விரிவடைந்தது.

பகுதி மின்கடத்தித் துறையின் உற்பத்தி 9.6 விழுக்காடு கூடியது.

போக்குவரத்துப் பொறியியல் துறையின் உற்பத்தி ஆக அதிகமாக 15.8 விழுக்காடு வளர்ச்சி கண்டது. விமானத் துறை அதற்கு உறுதுணையாக இருந்தது. அதன் உற்பத்தி 22.7 விழுக்காடு உயர்ந்தது. விமான உதிரிபாகங்களின் உற்பத்தி கூடியதும் வர்த்தக விமானங்களுக்குத் தொடர்ந்து பழுதுபார்ப்பு, பராமரிப்புப் பணிகள் தேவைப்பட்டதும் காரணங்களாக அமைந்தன.

கடல்துறையைப் பொறுத்தவரை உற்பத்தி 11.7 விழுக்காடு கூடியது. கப்பல்பட்டறைகளில் நடவடிக்கைகள் அதிகரித்தது அதற்கு முக்கியக் காரணம்.

குறிப்புச் சொற்கள்