தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தோனீசியாவில் ஆர்ப்பாட்ட இடங்களைத் தவிர்க்க சிங்கப்பூரர்களுக்கு அறிவுறுத்தல்

1 mins read
a309e149-f08c-44c8-b156-84d79d9c1349
இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவில் அரசாங்க கட்டடங்களை நோக்கி கற்கள் வீசிய ஆர்ப்பாட்டக்காரர்கள். - படம்: ராய்ட்டர்ஸ்

ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் இடங்களுக்குச் செல்ல வேண்டாம் என்றும் பொதுமக்கள் பேரளவில் ஒன்றுகூடும் இடங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் இந்தோனீசியாவில் உள்ள சிங்கப்பூரர்களுக்கு ஜகார்த்தாவில் உள்ள சிங்கப்பூர் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

“இந்தோனீசியாவில் இருக்கும் சிங்கப்பூரர்கள் விழிப்புடன் இருந்து உள்ளூர் செய்தி மூலம் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும். இந்தோனீசிய அதிகாரிகளின் ஆலோசனையைக் கேட்டு நடக்க வேண்டும்,” என்று சனிக்கிழமையன்று (ஆகஸ்ட் 30) தனது அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் சிங்கப்பூர் தூதரகம் பதிவிட்டது.

இந்தோனீசியாவில் இருக்கும் சிங்கப்பூரர்கள் மற்றும் இந்தோனீசியாவுக்குப் பயணம் மேற்கொள்ளும் சிங்கப்பூரர்கள் https://eregister.mfa.gov.sg எனும் இணையப்பக்கத்துக்குச் சென்று வெளியுறவு அமைச்சுடன் பதிவுசெய்துகொள்ளுமாறு அது ஊக்குவித்தது.

குறிப்புச் சொற்கள்