அமைச்சர்நிலை வட்டமேசை மாநாட்டுக்காக சிங்கப்பூர் அமைச்சர்கள் இந்தியாவுக்குப் பயணம்

1 mins read
7f845abe-8aad-45a4-b6cf-4f838ca471e9
புதுடெல்லியில் உள்ள இந்தியா கேட். - படம்: இணையம்

இந்திய-சிங்கப்பூர் அமைச்சர்களின் மூன்றாவது வட்டமேசை மாநாடு புதன்கிழமை (ஆகஸ்ட் 13) இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் நடைபெறும்.

புதிய மற்றும் வளர்ந்து வரும் பகுதிகளில் ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்காக சிங்கப்பூருக்கும் இந்தியாவிற்கும் இடையிலான ஒரு முக்கியமான அமைச்சர்நிலை தளமாக வட்டமேசை மாநாடு உள்ளது.

ஆகஸ்ட் 2024ல் சிங்கப்பூரில் நடைபெற்ற இரண்டாவது வட்டமேசை மாநாட்டின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்து, புதிய வளர்ச்சி வாய்ப்புகளை இப்போது நடைபெறவிருக்கும் மூன்றாவது வட்டமேசை மாநாடு அடையாளம் காணும்.

துணைப் பிரதமரும் வர்த்தக தொழில் அமைச்சருமான கான் கிம் யோங் சிங்கப்பூர் பேராளர் குழுவுக்குத் தலைமை வகிப்பார். தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சரும் உள்துறை அமைச்சருமான கா. சண்முகம், வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ, மனிதவள அமைச்சரும் எரிசக்தி, அறிவியல், தொழில்நுட்பம் ஆகியவற்றுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான டான் சீ லெங், தற்காலிக போக்குவரத்து அமைச்சர் ஜெஃப்ரி சியாவ் ஆகியோரும் சிங்கப்பூர் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

இந்தியப் பேராளர் குழுவில் நிதி மற்றும் பெருநிறுவன விவகார அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர், வர்த்தக, தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம், ரயில்வே, தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் இடம்பெற்றிருப்பர்.

குறிப்புச் சொற்கள்