ஐநாவின் தீர்மான ஏற்பை வரவேற்கும் சிங்கப்பூர்

1 mins read
2e20db5b-73f4-42de-93d3-1166203dbc0e
நிரந்தரப் போர் நிறுத்தம் உறுதியானது, காஸாவை மறுசீரமைக்க மேற்கொள்ளப்படும் அனைத்துலக முயற்சிகளுக்கு சிங்கப்பூர் பங்களிக்கும் என்று அமைச்சு உறுதி அளித்தது. - படம்: ஏஎஃப்பி

காஸா தொடர்பாக அமெரிக்காவால் வடிவமைக்கப்பட்ட தீர்மானத்தை ஐநா பாதுகாப்பு மன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.

இதை சிங்கப்பூர் வரவேற்றுள்ளது.

இது நீடித்த அமைதிநிலைக்கு வழிவகுக்கும் என்று அது கூறியது.

“தற்போது நடப்பில் உள்ள சண்டை நிறுத்தத்துக்கு அனைத்துத் தரப்பினரும் உட்பட்டு நடப்பது மிகவும் முக்கியம். அத்துடன், மனிதாபிமான உதவிகள், அத்தியாவசியப் பொருள்கள் காஸாவுக்குள் எவ்வித தடையுமின்றி செல்வது அவசியம்,” என்று வெளியுறவு அமைச்சு செவ்வாய்க்கிழமை (நவம்பர் 18) தெரிவித்தது.

“நிரந்தரப் போர் நிறுத்தம் உறுதியானது. காஸாவை மறுசீரமைக்க மேற்கொள்ளப்படும் அனைத்துலக முயற்சிகளுக்குச் சிங்கப்பூர் பங்களிக்கும்,” என்று அமைச்சு உறுதி அளித்தது.

இருநாட்டுத் தீர்வின்கீழ் பாலஸ்தீனர்களின் சுய ஆட்சி உரிமையை ஆதரிக்கிறோம் என்றும் இது ஐநா பாதுகாப்பு மன்றத் தீர்மானங்களுக்கு உட்பட்டு இருக்க வேண்டும் என்றும் அமைச்சு கூறியது.

இஸ்‌ரேலை அடையாளம் காணும், பயங்கரவாதத்தைக் கைவிடும் செயலாற்றல் மிக்க அரசாங்கத்தைப் பாலஸ்தீனம் கொண்டிருக்கும் நிலை ஏற்படும்போது அதைத் தனிநாடாகச் சிங்கப்பூர் அடையாளம் காணும் என்று செப்டமக்பர் 22ஆம் தேதியன்று வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்