இந்தோனீசியாவின் 80வயது சுதந்திர தினம்; அதிபர் தர்மன் வாழ்த்து

1 mins read
6f6d9566-a750-4754-9c0f-e8e8366fe5b9
இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுப்பியாந்தோவுடன் (இடது) சிங்கப்பூரின் அதிபர் தர்மன் சண்முகரத்னம். - படம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இந்தோனீசியா ஆகஸ்ட் 17ல் கொண்டாடும் தன் 80வது சுதந்திர தினத்தை ஒட்டி அதிபர் தர்மன் சண்முகரத்னமும் பிரதமர் லாரன்ஸ் வோங்கும் இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுப்பியாண்டோவுக்குத் தங்கள் வாழ்த்துகளைக் கடிதம் வழியாகத் தெரிவித்துள்ளனர்.

திரு பிரபோவோவிடம் அனுப்பிய தம் கடிதத்தில், 1945ஆம் ஆண்டு முதல் சுதந்திர நாடாகத் திகழ்ந்து வந்த இந்தோனசீயாவின் உருமாற்றம், முன்னேற்றம், ஒற்றுமையுணர்வு ஆகியவை உற்சாகமூட்டும் கதையாக இருப்பதாகத் திரு தர்மன் கூறினார்.

இந்தோனீசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான உறவு, இரு நாடுகளின் சுதந்திரத்திற்கு முந்தைய, நெடுங்கால வரலாற்றுக் காலத்திலிருந்து தொடங்கியதாக அவர் குறிப்பிட்டார்.

சிங்கப்பூரின் தேசிய தின அணிவகுப்பில் திரு பிரபோவோவின் வருகை, இரு நாடுகளின் நெருக்கமான நட்பையும் பகிரப்பட்ட மரபையும் எடுத்துக்காட்டுவதாகத் திரு தர்மன் கூறினார்.

“இம்மாதம் நாங்கள் நம் மைல் கற்களை முறையே கொண்டாடுகையில், நமது நட்பின் அடுத்த அத்தியாயத்திற்காக நான் காத்திருக்கிறேன். பரஸ்பர ஒற்றுமை, நம்பிக்கை, மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில் வலுவான ஆதாரத்தை அமைக்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்,” என்றும் திரு தர்மன் கூறினார்.

திரு பிரபோவோவின் தலைமைத்துவம் கீழ், நாட்டின் கட்டியெழுப்புதலிலும் பொருளியல் மேம்பாட்டிலும் இந்தோனீசியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்திருப்பதாக திரு வோங் குறிப்பிட்டார்.

அத்துடன் திரு பிரபோவோவின் தலைமையில் உணவு, இந்தோனீசியா, தனது எரிபொருள் பாதுகாப்பை வலுப்படுத்தியும் மனிதவளத்தை மேம்படுத்தியும் மக்களின் வாழக்கையைத் தூக்கி நிறுத்தியுள்ளதாகத் திரு வோங் கூறினார்.

குறிப்புச் சொற்கள்