சிம் அட்டை பதிவு மோசடியில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் ஆறு பேர் மீது, அக்டோபர் 27ஆம் தேதிக்கும் 31ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் குற்றம் சுமத்தப்படும்.
28 வயதுக்கும் 39 வயதுக்கும் இடைப்பட்ட ஆடவர் மூவர், பெண்கள் மூவர் மீது குற்றம் சாட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிம் அட்டை பதிவு மோசடி தொடர்பாகக் குற்றம் சாட்டப்பட இருக்கும் ஆறு பேர் உட்பட 18 பேர் கைது செய்யப்பட்டதாகக் காவல்துறை சனிக்கிழமையன்று (அக்டோபர் 25) தெரிவித்தது.
அக்டோபர் 15ஆம் தேதிக்கும் 23ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் தீவெங்கும் நடத்தப்பட்ட சோதனையில் இந்த 18 பேரும் பிடிபட்டனர்.
அவர்களில் 15 பேர் ஆண்கள். மூவர் பெண்கள்.
மோசடிக் குற்றங்கள் புரிவதற்காக சிம் அட்டைகளைப் பதிவு செய்தோரைப் பிடிக்கும் இலக்குடன் அதிரடி நடவடிக்கை நடத்தப்பட்டது.
கைது செய்யப்பட்டவர்கள் சிம் அட்டைகளைச் சட்டவிரோதமான முறையில் பதிவு செய்து அவற்றை மோசடிக் கும்பலிடம் கொடுத்து பணம் பெற்றுக்கொண்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு சிம் அட்டைக்கும் $10லிருந்து $20 வரை வழங்கப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
கைது செய்யப்பட்ட ஒவ்வொருவரும் 38 முதல் 66 சிம் அட்டைகள் வரை பதிவு செய்து அவற்றை மோசடிக் கும்பலிடம் கொடுத்து பணத்தைப் பெற்றுக்கொண்டதாக அறியப்படுகிறது.

