பாலர்பள்ளியில் இரண்டு வயதுப் பெண் குழந்தையைப் பாலியல் ரீதியாகத் தாக்கியதாகச் சந்தேகிக்கப்படும் அடவரின் அடையாளத்தை ரகசியமாக வைத்திருக்க விடுக்கப்பட்ட உத்தரவு மீட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
சந்தேக நபரான 60 வயது டியோ குவான் ஹுவாட் அக்குழந்தை பயின்ற அதே பாலர்பள்ளியில் சமையல்காரராகப் பணியாற்றினார். கடந்த 2023ஆம் ஆண்டு மேய முதல் நவம்பர் மாதத்துக்கு இடைப்பட்ட காலத்தில் அவர் சம்பந்தப்பட்ட குழந்தையிடம் பாலியல் ரீதியாகத் தவறாக நடந்துகொண்டதாக நம்பப்படுகிறது.
மலேசியாவைச் சேர்ந்த அவர் பின்னர் கைது செய்யப்பட்டார். 2023 டிசம்பர் மாதம் முதல் அவர் காவல்துறைத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
சிங்கபபூர் நிரந்தரவாசியான டியோ மீது, 14 வயதுக்குக் கீழ் உள்ள ஒருவரை மானபங்கப் படுத்தியதாக எட்டுக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அவர் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 22) குற்றங்களை ஒப்புக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பான சில விவரங்களை அவர் ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளார். இவ்வழக்கு, இனி மறுபடியும் நீதிமன்ற விசாரணைக்கு முந்தைய கட்டடத்துக்கு அனுப்பப்படும்; நீதிமன்ற விசாரணைக்கு முந்தைய கலந்துரையாடல் வரும் செப்டம்பர் மாதம் எட்டாம் தேதி இடம்பெறும்.
டியோ புரிந்ததாகக் கூறப்படும் குற்றங்கள் வெளிச்சத்துக்கு வந்த பிறகு அவர் பணிநீக்கம் செய்யப்பட்டதாக முன்னதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்திருந்தது. சம்பவங்களை மறைத்தாக நம்பப்படும் நான்கு பெண்கள் மீதும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.