செவ்வாய்க்கிழமை (நவம்பர் 18) காலை, தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையில் சில பயணிகள் சேவை தாமதத்தை எதிர்கொண்டனர்.
சேவைத் தடை ஏறத்தாழ அரைமணி நேரத்துக்கு நீடித்தது.
கெல்டிகாட் நிலையத்துக்கும் கரையோரப் பூந்தோட்டங்கள் நிலையத்துக்கும் இடையே உள்ள 11 நிலையங்களில் சேவை தாமதம் ஏற்பட்டிருப்பதாக ரயில் நிலையங்களில் உள்ள அறிவிப்புப் பலகைகள் காட்டின.
ரெட்டிட் பதிவில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட நிலையங்களில் இலவசப் பேருந்துச் சேவை வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
ரயில் சேவை காலை 7.15 மணிக்கு முன்பே வழக்கநிலைக்குத் திரும்பியதாக அறியப்படுகிறது.
ஆனால், சேவை தாமதம் தொடர்பாக எஸ்எம்ஆர்டியின் சமூக வலைத்தளங்களில் போதுமான தகவல்கள் இல்லாததால் பயணிகள் அதிருப்தி அடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

