தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சம்பள கோரிக்கை, முறையற்ற பணிநீக்கப் புகார்கள் அதிகரிப்பு

2 mins read
e22b2343-f318-435a-a43b-95b5cdb8d6da
2024ஆம் ஆண்டில் சம்பளம் தொடர்பாக 9,848 கோரிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டதாக மனிதவள அமைச்சும் சர்ச்சை நிர்வாகத்துக்கான முத்தரப்புப் பங்காளித்துவமும் தெரிவித்தன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில், சம்பளக் கோரிக்கை மற்றும் முறையற்ற பணிநீக்கம் தொடர்பான புகார்களின் எண்ணிக்கை 2024ஆம் ஆண்டில் அதிகரித்தது.

பணி விலகிய ஊழியர்களின் எண்ணிக்கையும் ஏற்றம் கண்டது. கூடுதல் வணிகங்கள் மூடப்பட்டன.

சம்பளம் கிடைக்கவில்லை என்று செய்யப்பட்ட புகார்களின் எண்ணிக்கை 2019ஆம் ஆண்டுக்குப் பிறகு 2024ஆம் ஆண்டில் உச்சத்தை எட்டியது. ஒவ்வொரு 1,000 ஊழியருக்கும் 2.63 புகார்கள் எனும் விகிதத்தில் கோரிக்கைகளின் எண்ணிக்கை பதிவாயிற்று.

சவால்மிக்க சூழலில் வர்த்தகங்கள் சிரமப்பட்டதே இதற்கு முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது.

தகவல் மற்றும் தொடர்பு, கட்டுமானம், நிர்வாக ஆதரவுச் சேவை போன்ற துறைகளில் கூடுதல் சர்ச்சைகள் எழுந்ததால் கோரிக்கைகளின் எண்ணிக்கை ஏற்றம் கண்டதாகக் கூறப்படுகிறது.

2024ஆம் ஆண்டில் சம்பளம் தொடர்பாக 9,848 கோரிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டதாக மனிதவள அமைச்சும் சர்ச்சை நிர்வாகத்துக்கான முத்தரப்புப் பங்காளித்துவமும் தெரிவித்தன.

வேலை தொடர்பாகப் செய்யப்பட்ட 11,685 புகார்களில் பெரும்பாலானவை சம்பளம் தொடர்பானவை. எஞ்சிய புகார்கள் முறையற்ற பணிநீக்கம் தொடர்பானவை.

2024ஆம் ஆண்டில் சம்பள கோரிக்கைகள் மூலம் ஊழியர்கள் ஒட்டுமொத்த அடிப்படையில் $19 மில்லியன் பெற்றுக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

அண்மைய ஆண்டுகளில் இதுவே ஆக அதிகம் எனத் தெரியவந்துள்ளது.

சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைகளில் 46 விழுக்காட்டுக் கோரிக்கைகள் உள்ளூர் ஊழியர்களால் சமர்ப்பிக்கப்பட்டவை. மீதமுள்ள கோரிக்கைகள் வெளிநாட்டு ஊழியர்களால் சமர்ப்பிக்கப்பட்டவை.

2024ஆம் ஆண்டில் சமர்ப்பிக்கப்பட்ட முறையற்ற பணிநீக்கப் புகார்களில் 71 விழுக்காட்டுப் புகார்களுக்கு சர்ச்சை நிர்வாகத்துக்கான முத்தரப்புப் பங்காளித்துவம் தீர்வு கண்டது.

மீதமுள்ள 29 விழுக்காட்டுப் புகார்கள் வேலை வாய்ப்பு கோரிக்கை நடுவர் மன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டன.

சர்ச்சை நிர்வாகத்துக்கான முத்தரத்துப்புப் பங்காளித்துவம் தீர்த்து வைத்த வழக்குகளில், முதலாளிகள் தங்கள் ஒப்பந்த நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தது தெரியவந்தது. அல்லது சமரசப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு புகார்கள் மீட்டுக்கொள்ளப்பட்டன.

மீதமுள்ள 39 விழுக்காட்டு வழக்குகள் முதலாளிகள் நல்லெண்ண வழங்குதொகை தந்தது, ஊழியர்கள் பணி விலக அனுமதித்தது, சேவைச் சான்றிதழை வழங்கியது, தவறான புரிதல்களை சரிசெய்தது ஆகியவை மூலம் தீர்த்து வைக்கப்பட்டன.

சர்ச்சை நிர்வாகத்துக்கான முத்தரப்புப் பங்காளித்துவம் இரண்டு மாதங்களுக்குள் தீர்த்து வைத்த வழக்குகளின் விதிகம் 2023ஆம் ஆண்டில் 79 விழுக்காடாக இருந்தது. இது கடந்த 2024ஆம் ஆண்டில் 86 விழுக்காடாக உயர்ந்தது.

முறையற்ற பணிநீக்கம் தொடர்பாகப் புகார் அளித்த ஊழியர்களுக்கு மூதலாளிகள், 2024ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த அடிப்படையில் ஏறத்தாழ $2.14 மில்லியன் வழங்குதொகை கொடுத்தனர். 2023ஆம் ஆண்டில் அந்தத் தொகை $1.72 மில்லியனாக இருந்தது.

குறிப்புச் சொற்கள்