தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சாலை விபத்து: வாகனத்தை நிறுத்தாமல் சென்றவரைத் தேடும் காவல்துறை

1 mins read
6920bdc1-9e94-4a0b-aa4b-77c3c80dd6f7
விபத்து காரணமாக வெள்ளை நிற கார் ஒன்று சேதமடைந்தது. மூன்று சாலைத் தடங்களைக் கொண்ட பார்ட்லி சாலையில் அந்த கார் கிடந்தது. - படம்: சாவ்பாவ் வாசகர்

பார்ட்லி சாலையில் சனிக்கிழமை (ஜூன் 14) சாலை விபத்து நிகழ்ந்தது.

விபத்துக்குள்ளான கார் சம்பவ இடத்தில் நிறுத்தாமல் அங்கிருந்து சென்றுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

அந்த கார் ஓட்டுநரைக் காவல்துறை தேடுகிறது.

அந்த கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்பட்டது.

விபத்து குறித்து காலை 8.20 மணி அளவில் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை கூறியது.

விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

விபத்து குறித்து விசாரணை நடைபெறுகிறது.

விபத்து காரணமாக வெள்ளை நிற கார் ஒன்று சேதமடைந்தது.

மூன்று சாலைத் தடங்களைக் கொண்ட பார்ட்லி சாலையில் அந்த கார் கிடந்தது.

அருகில் இருந்த மரமும் சாலைத் தடுப்பும் சேதமடைந்ததாக சாவ்பாவ் நாளிதழ் குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்