800க்கும் மேற்பட்ட கேபோட்கள்; சந்தேக நபர்மீது மேலும் மூன்று குற்றச்சாட்டுகள்

1 mins read
cf7afdc4-ee4d-40e4-9935-05dfb96374a6
ஜோர்டான் சின் வெய் லியாங் வைத்திருந்த கேபோட்களில் எட்டோமிடேட் போதைப்பொருள் இருந்ததாக நம்பப்படுகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கிட்டத்தட்ட 800 கேபோட்களுக்கு மேல் வைத்திருந்ததாக சந்தேகப் பேர்வழிமீது வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 5) மேலும் மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

ஜூலை 10ஆம் தேதி பீஷான் ஸ்திரீட் 13ல் உள்ள கார்ப் பேட்டையில் 804 கேபோட்களை விற்பனைக்குத் தயாராக வைத்திருந்ததாக ஜோர்டான் சின் வெய் லியாங் என்ற அந்த 27 வயது ஆடவர்மீது குற்றம்சாட்டப்பட்டது.

அதே நாளில் பீஷானில் உள்ள ஒரு வீட்டில் இருந்தவர்களுக்கு இரண்டு கேபோட்களை அவர் விற்பதாக இருந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

வெள்ளிக்கிழமை சுகாதார அறிவியல் ஆணையத்தை பிரதிநிதித்த வழக்கறிஞர்கள், சின்னுக்கு வழங்கப்பட்ட பிணைத் தொகையை 10,000 வெள்ளியிலிருந்து 15,000 வெள்ளிக்கு உயர்த்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். இதனை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

மலேசியாவுக்கும் வியட்னாமுக்கும் செல்ல தம்மை அனுமதிக்கக் கோரி சின் நீதிமன்றத்தில் மனு கொடுத்திருந்தார். சிங்கப்பூரைவிட்டு வரம்பற்ற காலத்திற்கு வெளியேறுவதாகவும் அவர் மனுவில் குறிப்பிட்டு இருந்ததால் அவரது மனுவை நீதிமன்றம் ஏற்கவில்லை.

“என்னுடைய குடும்பத்திற்கு நான்தான் மளிகைப் பொருள்களை வாங்கிக் கொடுக்க வேண்டும். அதனால் சிங்கப்பூர் திரும்புவதற்கு எத்தனை நாள் ஆகும் என்பது உறுதியாகத் தெரியவில்லை,” என்று சின் தெரிவித்திருந்தார்.

அவரது மனுவை நிராகரித்த மாவட்ட நீதிபதி ஜேனட் வாங், திரும்பி வருவதற்கான தேதியுடன் மீண்டும் விண்ணப்பிக்க உத்தரவிட்டார்.

குறிப்புச் சொற்கள்