ஆர்ச்சர்ட் ரோட்டில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 1) இரவு இரண்டு கார்கள் மோதிக்கொண்ட விபத்தின் தொடர்பில் 37 வயது ஆடவர் காவல்துறை விசாரணையில் உதவி வருகிறார்.
விபத்துக் குறித்து வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 1) இரவு சுமார் 8.40க்குத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறையும் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையும் கூறின.
சுய நினைவுடன் இருந்த 54 வயதுப் பெண் பயணி, டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
போக்குவரத்துக்கு எதிர்த்திசையில் பேரகான் கடைத்தொகுதிக்கு வெளியே ஒரு கார் இருப்பதைச் சமூக ஊடகங்களில் வெளியான படங்கள் காட்டுகின்றன. அதன் முன்புற விளக்குப் பகுதி சேதமடைந்திருந்தது.
சில மீட்டர் தொலைவில் இருந்த இன்னொரு காரின் பின்புறத்தினுடைய ஒரு பகுதி கழன்றுவிட்டது.
ஃபேஸ்புக்கில் எஸ்ஜிஆர்வி ஃபிரன்ட் மேன் எனும் பக்கத்தில் இடம்பெற்ற படத்தில் விபத்துக்குப் பிறகு சாலையின் இடப்புறம் இரண்டு தடங்கள் போக்குவரத்துக்கு மூடப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
காவல்துறை விசாரணை தொடர்கிறது.

