என்டியுசி என்டர்பிரைசின் தலைவர் பதவியிலிருந்து ஒய்வுபெற்ற லிம் பூன் ஹெங்

2 mins read
99c7a2a7-233c-42dd-bff2-a1dbed97f63c
முன்னாள் அமைச்சர் லிம் பூன் ஹெங். - படம்: சாவ்பாவ்

என்டியுசி என்டர்பிரைசின் தலைவர் பதவியிலிருந்து முன்னாள் அமைச்சர் லிம் பூன் ஹெங் ஓய்வுபெற்றுள்ளார்.

இன்கம் இன்சுரன்ஸ், என்டியுசி என்டர்பிசுக்குச் சொந்தமானது.

என்டியுசி என்டர்பிரைசின் பொதுக் கூட்டம் வியாழக்கிழமை (அக்டோபர் 30) கூட்டப்பட்டது.

தலைவர் பதவியிலிருந்து திரு லிம் ஓய்வுபெறுவது குறித்து பொதுக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

என்டியுசி என்டர்பிரைசின் புதிய தலைவராகத் திரு டான் ஹீ டெக் வெள்ளிக்கிழமையிலிருந்து (அக்டோபர் 31) பொறுப்பேற்றுக்கொள்வார்.

தெமாசெக்கின் தலைவர் பதவியிலிருந்து 77 வயது திரு லிம் அக்டோபர் 9ஆம் தேதியன்று விலகினார்.

2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து அவர் தெமாசெக்கின் தலைவராகச் செயல்பட்டு வந்தார்.

அவரை அடுத்து, முன்னாள் மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன் தெமாசெக்கின் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.

என்டியுசி என்டர்பிரைசின் தலைவராக 2012ஆம் ஆண்டிலிருந்து திரு லிம் பதவி வகித்து வருகிறார்.

என்டியுசியுடன் திரு லிம்முக்கு நீண்டகாலத் தொடர்பு உள்ளது.

அவர் அந்த அமைப்பின் துணை இயக்குநராக (1981-1983) இருந்து உதவித் தலைமைச் செயலாளராகப் (1983-1987) பதவி உயர்வைப் பெற்றார். பிறகு துணைத் தலைமைச் செயலாளராகப் (1987-1991) பதவி வகித்தார்.

அதையடுத்து, 1993ஆம் ஆண்டில் அவர் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

திரு ஓங் டெங் சியோங்கிற்குப் பிறகு, என்டியுசியின் தலைமைச் செயலாளராக அவர் பதவி வகித்தார்.

திரு லிம் 2011ஆம் ஆண்டில் அரசியலிலிருந்து ஓய்வு பெற்றார்.

2024ஆம் ஆண்டில் என்டியுசி என்டர்பிரைஸ் $8.2 பில்லியன் வருவாய் ஈட்டியதாகத் தெரிவிக்கப்பட்டது.

புதிய தலைவராகப் பொறுப்பேற்கும் திரு டான்னுக்கு வர்த்தகத்துறையிலும் அரசாங்கத்துறையிலும் பல்லாண்டு அனுபவம் உள்ளது.

2007ஆம் ஆண்டிலிருந்து அவர் ரிசோர்ட்ஸ் வோர்ல்டு செந்தோசாவுக்குத் தலைமை தாங்கினார். கடந்த மே மாதம் அப்பதவியிலிருந்து அவர் ஓய்வுபெற்றார்.

கெண்டிங் சிங்கப்பூரின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் அவர் பதவி வகித்தார்.

அப்பதவியிலிருந்து அவர் கடந்த மே மாதம் விலகினார்.

குறிப்புச் சொற்கள்