தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

2028 தொடக்கத்தில் சாஃப்ரா ஜூரோங்கில் புதிய வசதிகள்

2 mins read
விடுமுறையைக் கழிக்க உல்லாச விடுதி பாணியில் வில்லாக்கள்
bcbd4dd5-f8f2-47cc-85a3-48fbef712228
ஓவியரின் கைவண்ணத்தில், உல்லாச விடுதி பாணியிலான வில்லாக்கள். - படம்: சாஃப்ரா
multi-img1 of 2

2028 முதல், மேற்குப் பகுதியில் வசிப்பவர்கள் சாஃப்ராவின் மூன்று மாடி வில்லாக்களில் தங்கலாம், நீச்சல்குளம் அருகில் உள்ள சிற்றுண்டியகத்தில் ஓய்வெடுக்கலாம், புதுப்பிக்கப்பட்ட உள்ளரங்க விளையாட்டு மைதானத்தில் தங்கள் பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக பொழுதைக் கழிக்கலாம்.

பதினாறு ஆண்டு பழமையான சாஃப்ரா ஜூரோங் பொழுதுபோக்கு இடத்துக்கான ஒன்றரை ஆண்டு மேம்பாட்டுப் பணிகள் நிறைவடைந்த பிறகு, இந்தப் புதிய வசதிகள் 2028 தொடக்கத்தில் தயாராகிவிடும்.

2026 பிற்பகுதியிலிருந்து மேம்பாட்டுப் பணிகள் கட்டங்கட்டமாக நடைபெறும்போது, தேசிய சேவையாளர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் இந்தக் கட்டடத்தின் சில பகுதிகள் தொடர்ந்து திறந்திருக்கும்.

சாஃப்ரா ஜூரோங்கின் பொது வரவேற்பு நிகழ்வில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 19) இந்தத் திட்டங்களை அறிவித்த தற்காப்பு துணை அமைச்சர் டெஸ்மண்ட் சூ, சாஃப்ரா ஜூரோங் ஒரு ‘நகர்ப்புற சோலைவனமாக’ உருவாக்கப்படும் என்று கூறினார்.

விடுமுறையைக் கழிக்க மூன்று மாடி வில்லாக்கள், இரண்டு மாடி ‘டூப்ளெக்ஸ்’ குடியிருப்புகள், ஒரு மாடி ஸ்டுடியோக்கள் உள்ளிட்டவை புதிய வசதிகளில் அடங்கும். தற்போதுள்ள டென்னிஸ் மைதானங்களும் ‘பார்பெக்யூ’ குழிகளும் கட்டுமானத்துக்குப் பயன்படுத்தப்படும். இத்தகைய தங்குமிட வசதியை வழங்கும் முதல் சாஃப்ரா பொழுதுபோக்கிடம் இதுவே.

கூடுதல் உணவகங்கள், ஒரு புதிய ஃபுட்சல் மைதானம், புதிய நீர் விளையாட்டு அம்சங்களுடன் புதுப்பிக்கப்பட்ட நீச்சல்குளங்கள், உடற்பயிற்சிக் கூடத்தில் அறிவார்ந்த பயிற்சி உபகரணங்கள், உள்ளரங்க விளையாட்டு மைதானத்தில் கருப்பொருள் சார்ந்த புதிய விளையாட்டு அம்சங்கள் ஆகியவையும் இருக்கும்.

சாஃப்ரா தலைவருமான திரு சூ, அருகில் வசிக்கும் இளம் தேசிய சேவையாளர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் சிறந்த சேவையாற்ற புதிய திட்டங்களும் இருக்கும் என்று கூறினார்.

மேம்பாட்டுப் பணிகள் தொடங்குவதற்குமுன், இந்தப் பிரிவினரிடமிருந்து கருத்துகளைப் பெற சாஃப்ரா ஏற்கெனவே கருத்தாய்வுகளையும் குழுக் கலந்துரையாடல்களையும் நடத்தியிருந்தது.

ஜூரோங்கில் வசிப்போர் இந்த அறிவிப்புகளை வரவேற்றனர். மேற்குப் பகுதியில் இதுபோன்ற வசதிகள் இல்லாததால், புதிய உல்லாச விடுதிகளை தாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருப்பதாக அவர்கள் கூறினர்.

குறிப்புச் சொற்கள்