சிங்கப்பூரில் ஊசியில்லா சளிக்காய்ச்சல் தடுப்பு மருந்து

1 mins read
3754283b-008b-4d6c-80b6-b90d70700fce
அஸ்ட்ராஸெனக்காவின் புதிய தடுப்பு மருந்தை மூக்கில் தெளிப்பான் போல போட்டுக்கொள்ளலாம். - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

சிங்கப்பூரில் புதிய சளிக்காய்ச்சல் தடுப்பு மருந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அது ஓர் ஊசியில்லா தடுப்பு மருந்தாகும்.

சளிக்காய்ச்சல் காலம் வருவதால் ஊசிக்குப் பயந்தவர்கள் இந்தப் தடுப்பை மருந்தைப் போட்டுக்கொள்ளலாம்.

செவ்வாய்க்கிழமை ( நவம்பர் 18) புதிய மருந்து பற்றி விவரம் தெரிவிக்கப்பட்டது.

பிரிட்டனைத் தளமாகக் கொண்ட ‘அஸ்ட்ராஸெனக்கா’ மருந்து நிறுவனம் சிங்கப்பூரில் தடுப்பு மருந்து இருப்பதை அறிக்கை வாயிலாக உறுதிசெய்தது.

இம்மருந்துக்கு சிங்கப்பூரின் சுகாதார அறிவியல் ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இரண்டு முதல் 49 வயது வரையிலான தனிப்பட்டவர்கள் இம்மருந்தை பயன்படுத்தலாம் என்று ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

அந்தத் தடுப்பு மருந்து ‘ஃபுளுமிஸ்ட் டிரைவேலண்ட்’ என்றும் அழைக்கப்படுகிறது. வைரஸ் கிருமியின் எச்1என்1, எச்3என்2 மற்றும் பி/விக்டோரியாவால் ஏற்படும் சளிக்காய்ச்சலுக்கு அது தடுப்பு மருந்தாகப் பயன்படுத்தப்படும்.

இது, சிங்கப்பூரில் கிடைக்கும் முதல் ஊசியில்லா தடுப்பு மருந்தாகும். பிரிட்டன், அமெரிக்கா போன்ற இதர நாடுகளில் இது ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தத் தடுப்பு மருந்து மூக்குத் தெளிப்பானாக மிக எளிய வழியில் போட்டுக்கொள்ளலாம்.

“ஊசியில்லாத் தடுப்பு மருந்தாக இருப்பதால் சிங்கப்பூர் முழுவதும் மக்களில் பலர் இதனை போட்டுக்கொள்ள முன்வருவார்கள் என்று மவுண்ட் எலிசபெத் நொவினா மருத்துவமனையின் தொற்றுநோய்த் தடுப்பு நிபுணரான டாக்டர் லியோங் ஹோ நாம் கூறினார்.

“எளிதில் பாதிக்கக்கூடிய நோயிலிருந்து அதிகமானோரைப் பாதுகாக்க முடியும்,” என்றும் அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்