தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மோசடிகளைக் கையாள கூடுதல் தேசிய சேவையாளர்கள் நியமிக்கப்படலாம்: காவல்துறை

2 mins read
683bb883-bc2a-4b2a-909e-3e9ef8e090c9
கோப்புப்படம்: - இணையம்

மோசடிகளைத் தடுக்க இணையவழி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முழுநேர தேசிய சேவையாளர்களைக் கொண்டுள்ள சிறப்புக் குழு ஒன்று இயங்கி வருகிறது.

தேசிய சேவை இணையக் குற்றத் தடுப்பு செயல்பாட்டுக் குழு (என்எஸ்சிஓ) எனப்படும் இக்குழு மோசடிக்காரர்களைக் கண்டுபிடிக்க சமூக ஊடகங்களில் ‘தேடல்’ நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. அதோடு, மோசடி இணையத்தளங்களைப் பொதுமக்கள் பயன்படுத்த முடியாதபடி செய்கிறது.

மோசடிச் செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சென்ற ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் புதிய பிரிவில் 10 முழுநேர தேசிய சேவையாளர்கள் பணியில் இருக்கின்றனர். 2024ஆம் ஆண்டு என்றும் காணாத அளவில் அதிகமாக, மோசடிகளுக்கு ஆளானோர் மொத்தம் 1.1 பில்லியன் வெள்ளியைப் பறிகொடுத்தனர்.

இணையக் குற்றங்களுக்கு எதிராகத் தங்களின் பல்வேறு பிரிவுகள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு உதவிக்கரம் நீட்ட என்எஸ்சிஓவுக்குக் கூடுதலானோரைச் சேர்க்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் மோசடி நடவடிக்கைகளை அடையாளம் காண்பது வனப்பகுதியில் வேட்டைக்காரரைத் தேடுவதற்குச் சமம் என்கிறார் என்எஸ்சிஓ குழுவைச் சேர்ந்த 21 வயது இர்ஃபான் டானியல் முகம்மது ‌ஷாரின். என்எஸ்சிஓவில் பணியாற்றும் முதல் வீரர்களில் அவர் ஒருவர்.

சிறப்பு கான்ஸ்டபல் இர்ஃபான், என்எஸ்சிஓவில் அவரின் சகப் பணியாளரான சிறப்பு கான்ஸ்டபல் டான் டெ சுவே, 22, ஆகியோர் தங்களின் அனுபவங்களை கடந்த புதன்கிழமை (ஜூலை 9) காவல்துறை கேன்டோன்மென்ட் நிலையத்தில் (Police Cantonment Complex) ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுடன் பகிர்ந்துகொண்டனர்.

இருவரும் தகவல் தொழில்நுட்பத்தில் டிப்ளோமா கல்வி பயின்றவர்கள். இவ்வாறு தாங்கள் தேசத்துக்கு சேவையாற்றுவோம் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை.

சிறப்பு கான்ஸ்டபல் டான், தனது நண்பர்கள் பலரைப்போல் தனக்கு அலுவலக உதவியாளர் பொறுப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்த்தார். ஆனால் அவருக்குக் காத்திருந்தது இன்ப அதிர்ச்சி.

“எனக்குப் பெரும் அதிர்‌ஷ்டம் கிட்டியது போல் இருந்தது,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்