காணாமல்போன 10 வயதுச் சிறுவன் கண்டுபிடிக்கப்பட்டான்

1 mins read
3cf8fb1c-4bca-4db0-9d69-0292c36a4340
காணாமல்போயிருந்த ஸுல்ஃபி அம்ஸி அப்துல்லா. - படம்: காவல்துறை

முன்னதாகக் காணாமல் போனதாக அதிகாரிகளிடம் தெரியப்படுத்தப்பட்ட 10 வயதுச் சிறுவன் கண்டுபிடிக்கப்பட்டு விட்டதாகக் காவல்துறை ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 26) தெரிவித்தது.

ஸுல்ஃபி அம்ஸி அப்துல்லா, கடைசியாக அக்டோபர் 22ஆம் தேதி மாலை 6.45 மணிக்கு புளோக் 48 லோவர் டெல்டா சாலை அருகே காணப்பட்டான்.

இச்சிறுவன் குறித்த தகவல் தெரிந்தவர்கள் 1800-255-0000 என்ற தொலைபேசி எண்ணிலோ www.police.gov.sg/i-witness என்ற இணையப்பக்கத்திலோ தகவல் தெரிவிக்கலாம் என்று காவல்துறை சனிக்கிழமை கூறியிருந்தது.

தங்களுக்கு அளிக்கப்படும் அனைத்துத் தகவல்களும் முற்றிலும் ரகசியமாக வைக்கப்படும் என்றும் காவல்துறை தெரிவித்திருந்தது.

இதே சிறுவன், அக்டோபர் 13ஆம் தேதி காலையிலும் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டு பின்னர் கண்டுபிடிக்கப்பட்டான்.

குறிப்புச் சொற்கள்